Wednesday, 12 March 2014

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.
இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.

சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை.

நாம் ஒரு முறையை பார்ப்போம்.
அனைத்து நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
1) புதினா உப்பு
2) ஓம உப்பு
3) கட்டி கற்பூரம்

இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.

சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.

இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.
இப்பொழுது தைலம் தயார்.

இது மிகவும் வீரியமான தைலம்.

உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.

இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை.

நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.

சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

விரண சஞ்சீவினித் தைலம்

விரண சஞ்சீவினித் தைலம்
(வெளிப்பிரயோகத்திற்காக)

இரசம்
கந்தகம்
கந்தகம்
மயில்துத்தம்
வெண்குங்கிலியம்
கருஞ்சீரகம்
சேராங்கொட்டை
நீரடிமுத்து
புங்கன் வேர்ப்பட்டை
வெள்ளை கரிசாலைச் சாறு
வெட்டுக்காயப்பூண்டு
கிரந்திநாயகம்
சிறுகண்பீளை
நேத்திரப்பூண்டு விழுது

நேத்திரப்பூண்டை அத்தாற் பொருத்தி என்றும் சொல்வார்கள் .அதாவது அறுத்து மீண்டும் பொருத்தினால் பொருந்தும். எனவே இந்தப் பெயர் . இதை கண் கோளாறுகள் 96 க்கும் நல்லெண்ணெயில் போட்டு பத்து நாட்கள் சூரிய புடத்தில் வைத்து வடிகட்டி நேத்திரப் பூண்டுத் தைலம் தயாரித்து கண்களில் நேரடியாக பிரயோகம் செய்யலாம்.இந்த காணொளிக் காட்சியில் அத்தாற் பொருத்தியின் செயல் பாட்டைக் காணுங்கள்.

பொடுதலைச்சாறு
சிறுசெருப்படைச்சாறு.
குப்பைமேனிச்சாறு
வேப்பெண்ணெய்
தேங்காயெண்ணெய்

தீரும் நோய்கள்: அனைத்து வகைப் புண்களும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் புண்கள் ( GANGRENE ) முதல் அனைத்துப் புண்களும் ஆறும்.சொறி சிரங்கால் வரும் புண்களையும் ஆற்றும்.இதில் பாஷாணச் சரக்குகள் சேர்வதால் , இதை சிறு குழந்தகள் நடமாடும் இடத்தில் வைக்கக் கூடாது. நீங்களும் கவனமாகக் கையாளுங்கள் .மிகக் கடுமையான ஆறாத புண்கள் கூட ஆறும்.

பால்வினை நோய்களான ஆண்குறி மற்றும் பெண் குறிகளிலுண்டாகும் புண்களை மிக நன்றாக ஆற்றி அங்குள்ள கிருமிகளைக் கொல்வதில் இந்த விரண சஞ்சீவித் தைலம் அற்புதமானது .
விரண சஞ்சீவினித் தைலம் (வெளிப்பிரயோகத்திற்காக) இரசம் கந்தகம் கந்தகம் மயில்துத்தம் வெண்குங்கிலியம் கருஞ்சீரகம் சேராங்கொட்டை நீரடிமுத்து புங்கன் வேர்ப்பட்டை வெள்ளை கரிசாலைச் சாறு வெட்டுக்காயப்பூண்டு கிரந்திநாயகம் சிறுகண்பீளை நேத்திரப்பூண்டு விழுது நேத்திரப்பூண்டை அத்தாற் பொருத்தி என்றும் சொல்வார்கள் .அதாவது அறுத்து மீண்டும் பொருத்தினால் பொருந்தும். எனவே இந்தப் பெயர் . இதை கண் கோளாறுகள் 96 க்கும் நல்லெண்ணெயில் போட்டு பத்து நாட்கள் சூரிய புடத்தில் வைத்து வடிகட்டி நேத்திரப் பூண்டுத் தைலம் தயாரித்து கண்களில் நேரடியாக பிரயோகம் செய்யலாம்.இந்த காணொளிக் காட்சியில் அத்தாற் பொருத்தியின் செயல் பாட்டைக் காணுங்கள். பொடுதலைச்சாறு சிறுசெருப்படைச்சாறு. குப்பைமேனிச்சாறு வேப்பெண்ணெய் தேங்காயெண்ணெய் தீரும் நோய்கள்: அனைத்து வகைப் புண்களும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் புண்கள் ( GANGRENE ) முதல் அனைத்துப் புண்களும் ஆறும்.சொறி சிரங்கால் வரும் புண்களையும் ஆற்றும்.இதில் பாஷாணச் சரக்குகள் சேர்வதால் , இதை சிறு குழந்தகள் நடமாடும் இடத்தில் வைக்கக் கூடாது. நீங்களும் கவனமாகக் கையாளுங்கள் .மிகக் கடுமையான ஆறாத புண்கள் கூட ஆறும். பால்வினை நோய்களான ஆண்குறி மற்றும் பெண் குறிகளிலுண்டாகும் புண்களை மிக நன்றாக ஆற்றி அங்குள்ள கிருமிகளைக் கொல்வதில் இந்த விரண சஞ்சீவித் தைலம் அற்புதமானது .