இரும்பு சத்து குறைபாடு (அனீமியா) இந்திய பெண்களை கடுமையாக தாக்கும் ஒரு நோய். இதற்கான காரணங்கள்:
வீட்டில் கணவர், குழந்தைகள் உண்டது போக மிச்சத்தை பெண்கள் உண்பது
சைவ உணவு வழக்கம்
மாதவிலக்கு/பிள்ளைபேறு முதலான காலங்களில் இரும்புசத்தின் தேவை அதிகரித்தல்
இதுபோக கடும் உடல்பயிற்சி செய்பவர்கள், அடிக்கடி ரத்ததானம் கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அனிமியா ரிஸ்க் உண்டு. ரத்ததானம் தரவேண்டாம் என பொருள் இல்லை. ஆனால் அடிக்கடி கொடுப்போர் இரும்பு சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம்.
அதனால் ஆண்களுக்கு தினம் 8 மிகி இரும்புசத்து உட்கொள்ள பரிந்துரைக்கபட்டுள்ளது. 19- 50 வயது உள்ள பெண்களுக்கு இது இருமடங்கு: அதாவது சுமார் 16- 18 மிகி இரும்புசத்து பரிந்துரைக்கபட்
டுள்ளது. இயற்கை பெண்களுக்கு செய்துள்ள ஓரவஞ்சனை எனவும் கூறலாம்.
இந்திய பெண்களில் சுமார் மூன்றில் இரு பங்கு பெண்களுக்கு அனிமியா பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் சைவ பெண் ஆக இருந்தால் உங்களுக்கு அனிமியா இருக்கும் வாய்ப்பு அதிகம். கீழ்காணும் சிக்கல்கள் உங்களுக்கு இருந்தால் அனிமியா இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
அடிக்கடி மூச்சுவாங்குதல்
அடிக்கடி களைப்பு ஏற்படுதல் ( இரும்பு சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களை உற்பத்தி செய்யபயன்படும். சிகப்பு அணுக்கள் உடலெங்கும் ஆக்சிஜனை எடுத்து செல்லும். இரும்புசத்து குறைபாடால் ஆக்சிஜன் பரவல் குறைந்து களைப்பு ஏற்பட்டுவிடும். சோர்ந்து உட்கார்ந்துவிடுவோம்)
தலைசுற்றல்
தலைவலி
உள்கை, பாதம் ஆகியவை சூடாக இல்லாமல் குளிராக இருத்தல். உங்கள் உள்கையை ஒருவர் கன்னத்தில் வையுங்கள். "ஐயோ குளிருது" என அவர் சொன்னால் அனிமியாவாக இருக்கும் வாய்ப்பு உண்டு
இதயம் சிறகடிக்கும் பறவையை போல் பட,பட என அடித்தல்.....
உனவல்லாதவற்றை உண்னதோணுதல் (உதா: செங்கல் பொடி, மண்..கர்ப்பிணிகளுக்கு இதை எல்லாம் உண்ண தோன்ற காரணம் இரும்புசத்து குறைபாடு)
நீங்கள் சைவ பெண் ஆக இருந்து மேலே உள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துவபரிசோதனை செய்து உடலில் உள்ள இரும்பு சத்து விகிதத்தை டெஸ்ட் செய்யலாம். அனிமியா இருப்பது தெரிந்தால் மருத்துவரிடம் கேட்டு இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம். ஸ்லோரிலீஸ் ஐயர்ன் எனப்படும் ஒருவகை சப்ளீமெண்ட் உண்டு. அது உடலுக்குள் இரும்புசத்தை மெதுவாக ரிலீஸ் செய்து அது கிரகிக்கபடுவதை அதிகரிக்கும்.
சைவர்களுக்கு உணவின் மூலம் இரும்புசத்தை அடைய முயல்வது சற்று கடினம். காரணம் சைவ உணவுகள் அனைத்திலும் நான் ஹெமே வகை இரும்புசத்து உள்ளது. இவற்றை உடல் கிரகிப்பது மிக கடினம். உதாரணம் கீரையில் இரும்புசத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்த இரும்பை உடல் கிரகிப்பதை தடுத்துவிடும். கீரையில் உள்ளதில் 2% அளவேனும் இரும்பு உடலில் சேர்ந்தால் அதிசயம்.
உலர்திராட்சை, பேரிச்சை, கோதுமை முதலானவற்றுக்கும் இதே நிலைதான். பேரிச்சையில் இரும்பு அதிகம் என பலரும் நம்பி வந்தாலும் அதில் உண்மை இல்லை. நூறு பேரிச்சை பழம் உண்டால் மட்டுமே 19- 50 வயது பெண்ணுக்கு போதுமான இரும்புசத்து கிடைக்கும். ஆனால் அதிலும் கிரகிக்கபடும் இரும்பின் சதவிகிதம் குறைவு
அசைவர்கள் முட்டை, சிக்கன், ஈரல் முதலானவற்றில் போதுமான அளவு இரும்புசத்தை அடையலாம். உதாரணம் 4 முட்டை உண்டால் அதில் 2.4 கிராம் அளவு எளிதில் கிரகிக்கபடும் இரும்புசத்து கிடைக்கும். நூறுகிராம் ஈரலில் ஒரு நாளைக்கு தேவையானதில் 130% இரும்புசத்து கிடைக்கும். அசைவ உணவுகளில் உள்ள இரும்புசத்து எளிதில் கிரகிக்கபட காரணம் அது ஹீமோக்ளோபின் வடிவில் இருப்பதுதான்.
சைவர்கள் பின்வரும் டெக்னிக்குகளை கையாளலாம்:
இரும்புசத்து உள்ள உணவுகளை உண்கையில் கூட வைட்டமின் சீ உள்ள உணவுகள் (நெல்லி, கொய்யா) உண்பது இரும்புசத்து கிரகிப்பதை சுமார் 3- 4 மடங்கு அதிகரிக்கிறது.
இரும்புசத்து உள்ள உணவுகளை உண்டு 2 மணிநேரம் முன்/பின் டீ, நட்ஸ், முழு தானியம் முதலானவற்றை தவிர்க்கலாம். டீயில் உள்ளெ டேனின், நட்ஸ், தானியத்தில் உள்ள பைட்டிக் அமிலம் முதலானவை இரும்புசத்து கிரகிப்பை குறைத்துவிடும்.
இரும்புசத்து உள்ல உணவுகளை உண்கையில் உடன் கால்ஷியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும். உதா: பால்,தயிர். கால்ஷியம் இரும்பு நுகர்வை குறைத்துவிடும்.
இரும்புசட்டியில் சமைத்தால் இரும்பு அதிக அளவில் உடலில் சேரும்
இரும்புசத்து உள்ள சைவ உணவுகள்:
தினம் ஒரு தேங்காய் உண்டால் சுமார் 10 மிகி இரும்புசத்து கிடைக்கும். தேங்காயில் உள்ல இரும்புசத்து அதிக அளவில் உடலில் சேர்கிறது.
ஹிமாலயன் சால்ட் இரும்புசத்து அதிகம் உள்ள வகை உப்பு. சாதா உப்புக்கு பதில் அதைபயன்படுத்தலாம்.
பீன்ஸ், பருப்புகள். இவற்றுடன் நெல்லிகனி, லெமென் ஜூஸ் முதலானவற்றை உன்டுவந்தால் இரும்புசத்து நுகர்வு அதிகரிக்கும்
பூசணிவிதையில் இரும்பு சத்து உண்டு
பிளாக்சீட் பவுடரிலும் உண்டு. தினம் 2 ஸ்பூன் பிளாக்சீட் பவுடர் உண்டால் 1.2 மிகி இரும்புசத்து கிடைக்கும்
கிணற்றுநீர், இயற்கையான சுனைநீர் ஆகியவற்றில் மண்ணின் தன்மையை பொறுத்து இரும்புசத்து கிடைக்கும். இரும்புகுழாய்களில் வரும் நீரிலும் இரும்புசத்து கிடைக்கலாம். ஆனால் இதை முழுமையாக நம்பி இருக்க முடியாது
மொத்தத்தில் நீங்கள் சைவ பெண்ணாக இருந்து அனிமியா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுப்பது உத்தமம்
Thursday, 21 September 2017
இரும்புசத்து
Tuesday, 19 September 2017
மார்பக கட்டியை கரைக்கும்
மார்பக கட்டியை கரைக்கும் இயற்கை மருத்துவம்
தொட்டா சிணுங்கி செடியின் ஏதேனும் ஒரு பாகத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதை ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிக்கட்டி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வந்தால், மார்பக கட்டி விரைவில் கரையும்.
கழற்சிக் காயில் உள்ள ஓடுகளை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பொடி செய்து, அதில் ஒரு பங்கு எடுத்து மிளகு பொடியுடன் சேர்த்து கலந்து அதை தினமும் இரு வேளைகள் உணவுக்கு முன் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், மார்பக கட்டி விரைவில் கரையும்.
ஒரு பாத்திரத்தில் 5 பூண்டு பற்கள் தட்டி போட்டு, அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் இருவேளைகள் குடித்து வந்தால் மார்பக கட்டிகள் கரைந்து, அதன் வலி மற்றும் வீக்கமும் குறையும்.
Monday, 18 September 2017
கைகண்ட [அனுபவ] மருத்துவம்
நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
Friday, 8 September 2017
உப்பும் மிளகும்
Wednesday, 6 September 2017
லக்னங்களின் பொது பலன்கள்
லக்னங்களின் பொது பலன்கள்
மேஷ லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர் செல்வங்களை சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தி இருக்கும். பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்து கொள்வார்.
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூரண ஆயுளுடன் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள். குருவோடு சனி சம்மந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுப்பார். சூரியனும், குருவும் யோகக்காரர்கள்.இருவரும் ஒன்றாக கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி இம் மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர் செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும் அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோச வாழ்க்கை அனுபவிப்பர். எப்போதும் கூடுமானவரை மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சுக்கிரன், சந்திரன் பாவிகள். சனி ஒருவரே இவர்களுக்கு ராஜயோகம் கொடுப்பார்.
செவ்வாய், புதன் மாரகர்கள். இவர்களுடன் பலம் பொருந்திய கிரகங்கள் இருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.
மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எப்ப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பர். எல்லோருடனும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவார். இவர்களுக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய், சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி சேர்ந்தால் யோககாரனாவான். சந்திரன் தோசமுடையவன். எனினும் மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். எதற்கும் இவர்களது வலுவை அறிந்து எதையும் சொல்ல வேண்டும்.
கடக லக்னம்
கடக லக்னத்தில் பிறந்தவருக்கு வேறு பெண்கள் பேரில் நாட்டம் இருக்கும் என்று சொல்லலாம். தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்பு கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு சிறிது கெட்ட பெயர்கள் உண்டாகலாம். தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை இருக்கும். செல்வங்கள் இவர்களை வந்தடையும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
கடக லக்னத்திற்கு செவ்வாயும், குருவும் சுபர்கள். செவ்வாய் யோகா காரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்கையை உயர்த்துவார்கள். சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் பாவிகள். சனி, சுக்கிரன், புதன் மாரகாதிபதிகள். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள். சுக்ரனும், புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்ரன் கூடி இருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள். சுக்ரன், சனி , புதன் இவர்கள் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப பல சமயங்களில் மற்றவர்களுக்கு சிம்ம ஸ்வரூபமாகவே விளங்குவார்கள்.
கன்னி லக்னம்
சற்று அடக்கமாக இருப்பார்கள். எதிலும் திறமைசாலிகளாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இருக்கும். நல்ல நடத்தை உள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.
கன்னி லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள். செவ்வாய், குரு பாவிகள். புதனும், சுக்கிரனும் யோககாரர்கள். புதனும் சுக்கிரனும் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தை கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். இவர்கள் திறமைசாலிகள் என்று பெயரெடுத்து புகழுடன் விளங்குவார்கள்.
துலா லக்னம்
தாரசு பிடிக்கும் தொழில் ஏற்படும். தராசு போல பேசுவார்கள். வியாபாரத்தில் சாமர்த்தியம், புத்திசாலிதனம், செல்வம் சேர்பதில் கவனம். எதிலும் முன் ஜாக்கிரதை இருக்கும். செல்வங்கள் சேரும். வாழ்கையில் சுகங்கள் அனுபவிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆயுள் நீண்டது என்றே கூற வேண்டும்.
துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சூரியன், செவ்வாய், குரு பாவிகள். சந்திரனும், புதனும் யோகக்காரர்கள். சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். சூரியன், குரு மாரகாதிபதிகள். செவ்வாய் தோஷம் உடையவர்.
விருச்சிக லக்னம்
விருசிக லக்னதில் பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சி உள்ளவராக இருப்பார். பெண்களின் மீது அன்பு வைத்திருப்பார். சற்று முன்கோபம் என்பது இருக்கும், செல்வன் என்று பெயர் எடுப்பர். எடுத்த காரியத்தை விரைவுடன் செய்யும் ஆற்றலுடையவராக இருப்பார். கொஞ்சம் அவசர குணம் இருக்கும்.
விருசிக லக்னத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள். லக்னத்தை சுபர்கள் பார்க்க இவர்கள் 9௦ வயது வரையில் வாழ்ந்து இருப்பார்கள் என்று கூறலாம். சூரியனும், சந்திரனும் கூடினால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். செவ்வாய், புதன், சுக்கிரன் மாரகாதிபர்கள். குருவும், சனியும் கொள்ள மாட்டார்கள். புதனும் கொள்ள மாட்டார். மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்.
தனுசு லக்னம்
தனுசு லக்னத்தில் பிறந்தவர் நல்ல அறிவுள்ளவராகவும் சொத்துக்கள் உள்ளவராகவும் இருப்பார். மனைவியிடம் அன்புடன் பழகி அவளுடைய நல்லெண்ணத்தையும் பெறுவார். மற்றவர்களுடன் இனிய சுபாவத்துடன் பழகுவார்.
தனுசு லக்னத்திற்கு சூரியனும், செவ்வாயும் சுபர்கள். சுக்கிரன் ஒருவரே பாவி. சூரியனும், புதனும் யோகக்காரர்கள். இருவரும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். சுக்கிரனும், புதனும் கூடினால் மாரகாதிபதியாவான். சுக்ரனுக்கு மாரகம் கொடுக்கும் வல்லமை உண்டு. சந்திரன், சனி கொல்ல மாட்டார்கள். மற்ற கிரகங்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.
மகர லக்னம்
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பலதரப்பட்ட வாழ்க்கை அமையும். நல்ல வஸ்திரங்கள் அணிவது, ஆடை ஆபரணங்கள் சேர்க்கையில் ஆசை இருக்கும். பெண்கள் இன்பத்தில் நாட்டம் இருக்கும். சாதூர்யதுடன் பேசுவர். முன்னேற்றத்தை கருதி பல திட்டங்கள் போட்டு கொண்டே இருப்பார்கள்.
மகர லக்னத்திற்கு செவ்வாய், புதன், சுக்கிரன் சுபர்கள். சந்திரன், குரு பாவிகள். சுக்ரன் யோககாரகன். சுக்ரனும், புதனும் கூடினால் ராஜயோகம் கொடுப்பார்கள். சூரியனும், சனியும் மாரகம் கொடுக்க மாட்டார்கள். சந்திரனுடன் சேர்ந்த சனி மாரகாதிபன். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிருக்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.
கும்ப லக்னம்
கும்ப லக்னத்தில் பிறந்தவர் மனைவியிடம் அன்புள்ளவராக இருப்பார். தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவராக இருப்பார். பெண்கள் பால் அதிக அன்பும், பரிவும் காட்டுபவராக இருப்பார். கல்வி கேள்விகளில் பூரண பலன் இருக்காது. சில சமயங்களில் கர்வம் அதிகமுள்ளவராக பிறருக்குத் தோற்றமளிப்பார்
கும்ப லக்னத்திற்க்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சந்திரன், செவ்வாய், குரு பாவிகள், சுக்கிரன் யோககாரகன். செவ்வாயும், சுக்ரனும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். குரு மாரகம் கொடுக்க மாட்டன்.. செவ்வாய், சந்திரனுடன் கூடி இருந்தால் மாரகம் கொடுப்பான். மாரகதிபதிகள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
மீன லக்னம்
முன்னோர்கள் தேடி வைத்த பொருள்களை அழித்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டு விடலாம். தன் காரியங்களை பிறர் அறியாமல் ரகசியமாக பாதுகாத்து கொள்வதில் ஜாக்கிரதை உள்ளவராக இருப்பார். அதிக திறமை உள்ளவராகவும் காணப்படுவார்.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், சனி பாவிகள். செவ்வாயும், குருவும் யோகக்காரர்கள். இவர்கள் கூடியிருந்தால் பிரபலமான ராஜ யோகத்தை கொடுப்பார்கள். சூரியன், சந்திரன், புதன், சனி மாரகாதிபர்கள்.
Tuesday, 5 September 2017
நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.
இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.
ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.
அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.
டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்
டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.
இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.
தயாரிக்கும் முறை:
5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.
அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.
இந்த சிகிச்சையால் 2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.
குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.
இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.
தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.