Sunday, 21 May 2017

பிரண்டை

🌵☘🌵☘🌵☘🌵☘🌵☘🌵☘🌵☘🌵☘🌵☘🌵☘🌵☘
*பிரண்டை - மருத்துவ குணங்கள்*

CONTENTSஎலும்புகளை பலப்படுத்தும் மருந்துரத்த மூலத்துக்கான மருந்துவாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து

எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைப்பதுடன் ஒவ்வாமைக்கு மருந்தாகிறது.

*எலும்புகளை பலப்படுத்தும் மருந்து*

_*தேவையான பொருட்கள்:*_

பிரண்டை பொடி, பனங்கற்கண்டு, பால். பிரண்டை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சுண்ணாம்பு தெளிவுநீரில் பிரண்டை துண்டுகளை ஊறவைத்து காயவைத்து பொடி செய்யலாம். அரை ஸ்பூன் பிரண்டை பொடியுடன், சிறிது பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிப்பதால் எலும்புகள் பலப்படும். எலும்பு முறிவு இருக்கும்போது இதை எடுத்து கொண்டால் வலி குறையும். பிரண்டையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்தை உடைய இது, ஈறுகளில் ரத்தம் கசிவை சரிசெய்யும்.

*ரத்த மூலத்துக்கான மருந்து*

_*தேவையான பொருட்கள்:*_

பிரண்டை துண்டுகள், மிளகு பொடி, சுக்கு பொடி, நெய். பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு சதைப் பகுதியை எடுக்கவும். இதை புளி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். இதனுடன் சுக்கு பொடி, மிளகுப் பொடி சேர்க்கவும்.

இதை பசையாக அரைத்து கொட்டை பாக்கு அளவுக்கு காலை, மாலை என 8 நாட்கள் சாப்பிட்டுவர ரத்த மூலம் சரியாகும்.

ஆசனவாயில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். மலைப் பகுதியில், வயல் வெளியில் படர்ந்து காணப்படும் பிரண்டை, ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. புண்களை ஆற்றும்.

*வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து*

_*தேவையான பொருட்கள்:*_

பிரண்டை துண்டுகள், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு, புளி, இஞ்சி, நல்லெண்ணெய்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் உளுந்தம் பருப்பு சேர்க்கவும். பூண்டு, வரமிளகாய், இஞ்சி துண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கவும். புளி தண்ணியில் ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். நன்றாக வதக்கவும்.

ஆறவைத்து சட்னி போன்று அறைத்து தாளிக்கவும். இது வாயு பிடிப்பை குணமாக்குவதுடன், கைகால் குடைச்சலை சரிசெய்கிறது. பிரண்டையானது உள் உறுப்புகள், எலும்புகளை பலப்படுத்துகிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை நிலைநிறுத்துகிறது.

Tuesday, 16 May 2017

மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

ஜீவசித்தர்கள் F G:
மாதவிடாயை சரியாக்கும் இயற்கை மருத்துவம் !!!

* சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.