Tuesday, 14 November 2017

வீக்கமும் வலியும் குறையும்.

பிண்ட தைலம்,மயன தைலம் என்று இரண்டு தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
அதை வாங்கி ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூன் ஒரு கிண்ணத்தில் எடூத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அந்த கிண்ணத்தை அதன் மேல் வைத்து சூடுபடுத்தினால் கலக்கினால் இரண்டும் ஒன்றாக கலந்து விடும்.
அதை உடலில் எங்கு வீக்கம் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள் வீக்கமும் வலியும் குறையும்.

Monday, 16 October 2017

மருத்துவ குறிப்புகள்

இயற்கையான முறையில் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின்  தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து  குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால்  குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால்  மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில்  தேய்க்கவும்.

12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை  அதிகரிக்கும்.

14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

Thursday, 21 September 2017

இரும்புசத்து

இரும்பு சத்து குறைபாடு (அனீமியா) இந்திய பெண்களை கடுமையாக தாக்கும் ஒரு நோய். இதற்கான காரணங்கள்:
வீட்டில் கணவர், குழந்தைகள் உண்டது போக மிச்சத்தை பெண்கள் உண்பது
சைவ உணவு வழக்கம்
மாதவிலக்கு/பிள்ளைபேறு முதலான காலங்களில் இரும்புசத்தின் தேவை அதிகரித்தல்
இதுபோக கடும் உடல்பயிற்சி செய்பவர்கள், அடிக்கடி ரத்ததானம் கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அனிமியா ரிஸ்க் உண்டு. ரத்ததானம் தரவேண்டாம் என பொருள் இல்லை. ஆனால் அடிக்கடி கொடுப்போர் இரும்பு சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம்.
அதனால் ஆண்களுக்கு தினம் 8 மிகி இரும்புசத்து உட்கொள்ள பரிந்துரைக்கபட்டுள்ளது. 19- 50 வயது உள்ள பெண்களுக்கு இது இருமடங்கு: அதாவது சுமார் 16- 18 மிகி இரும்புசத்து பரிந்துரைக்கபட்
டுள்ளது. இயற்கை பெண்களுக்கு செய்துள்ள ஓரவஞ்சனை எனவும் கூறலாம்.
இந்திய பெண்களில் சுமார் மூன்றில் இரு பங்கு பெண்களுக்கு அனிமியா பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் சைவ பெண் ஆக இருந்தால் உங்களுக்கு அனிமியா இருக்கும் வாய்ப்பு அதிகம். கீழ்காணும் சிக்கல்கள் உங்களுக்கு இருந்தால் அனிமியா இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
அடிக்கடி மூச்சுவாங்குதல்
அடிக்கடி களைப்பு ஏற்படுதல் ( இரும்பு சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களை உற்பத்தி செய்யபயன்படும். சிகப்பு அணுக்கள் உடலெங்கும் ஆக்சிஜனை எடுத்து செல்லும். இரும்புசத்து குறைபாடால் ஆக்சிஜன் பரவல் குறைந்து களைப்பு ஏற்பட்டுவிடும். சோர்ந்து உட்கார்ந்துவிடுவோம்)
தலைசுற்றல்
தலைவலி
உள்கை, பாதம் ஆகியவை சூடாக இல்லாமல் குளிராக இருத்தல். உங்கள் உள்கையை ஒருவர் கன்னத்தில் வையுங்கள். "ஐயோ குளிருது" என அவர் சொன்னால் அனிமியாவாக இருக்கும் வாய்ப்பு உண்டு
இதயம் சிறகடிக்கும் பறவையை போல் பட,பட என அடித்தல்.....
உனவல்லாதவற்றை உண்னதோணுதல் (உதா: செங்கல் பொடி, மண்..கர்ப்பிணிகளுக்கு இதை எல்லாம் உண்ண தோன்ற காரணம் இரும்புசத்து குறைபாடு)
நீங்கள் சைவ பெண் ஆக இருந்து மேலே உள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துவபரிசோதனை செய்து உடலில் உள்ள இரும்பு சத்து விகிதத்தை டெஸ்ட் செய்யலாம். அனிமியா இருப்பது தெரிந்தால் மருத்துவரிடம் கேட்டு இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நலம். ஸ்லோரிலீஸ் ஐயர்ன் எனப்படும் ஒருவகை சப்ளீமெண்ட் உண்டு. அது உடலுக்குள் இரும்புசத்தை மெதுவாக ரிலீஸ் செய்து அது கிரகிக்கபடுவதை அதிகரிக்கும்.
சைவர்களுக்கு உணவின் மூலம் இரும்புசத்தை அடைய முயல்வது சற்று கடினம். காரணம் சைவ உணவுகள் அனைத்திலும் நான் ஹெமே வகை இரும்புசத்து உள்ளது. இவற்றை உடல் கிரகிப்பது மிக கடினம். உதாரணம் கீரையில் இரும்புசத்து அதிகம். ஆனால் கீரையில் உள்ள ஆக்சலேட்டுகள் அந்த இரும்பை உடல் கிரகிப்பதை தடுத்துவிடும். கீரையில் உள்ளதில் 2% அளவேனும் இரும்பு உடலில் சேர்ந்தால் அதிசயம்.
உலர்திராட்சை, பேரிச்சை, கோதுமை முதலானவற்றுக்கும் இதே நிலைதான். பேரிச்சையில் இரும்பு அதிகம் என பலரும் நம்பி வந்தாலும் அதில் உண்மை இல்லை. நூறு பேரிச்சை பழம் உண்டால் மட்டுமே 19- 50 வயது பெண்ணுக்கு போதுமான இரும்புசத்து கிடைக்கும். ஆனால் அதிலும் கிரகிக்கபடும் இரும்பின் சதவிகிதம் குறைவு
அசைவர்கள் முட்டை, சிக்கன், ஈரல் முதலானவற்றில் போதுமான அளவு இரும்புசத்தை அடையலாம். உதாரணம் 4 முட்டை உண்டால் அதில் 2.4 கிராம் அளவு எளிதில் கிரகிக்கபடும் இரும்புசத்து கிடைக்கும். நூறுகிராம் ஈரலில் ஒரு நாளைக்கு தேவையானதில் 130% இரும்புசத்து கிடைக்கும். அசைவ உணவுகளில் உள்ள இரும்புசத்து எளிதில் கிரகிக்கபட காரணம் அது ஹீமோக்ளோபின் வடிவில் இருப்பதுதான்.
சைவர்கள் பின்வரும் டெக்னிக்குகளை கையாளலாம்:
இரும்புசத்து உள்ள உணவுகளை உண்கையில் கூட வைட்டமின் சீ உள்ள உணவுகள் (நெல்லி, கொய்யா) உண்பது இரும்புசத்து கிரகிப்பதை சுமார் 3- 4 மடங்கு அதிகரிக்கிறது.
இரும்புசத்து உள்ள உணவுகளை உண்டு 2 மணிநேரம் முன்/பின் டீ, நட்ஸ், முழு தானியம் முதலானவற்றை தவிர்க்கலாம். டீயில் உள்ளெ டேனின், நட்ஸ், தானியத்தில் உள்ள பைட்டிக் அமிலம் முதலானவை இரும்புசத்து கிரகிப்பை குறைத்துவிடும்.
இரும்புசத்து உள்ல உணவுகளை உண்கையில் உடன் கால்ஷியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும். உதா: பால்,தயிர். கால்ஷியம் இரும்பு நுகர்வை குறைத்துவிடும்.
இரும்புசட்டியில் சமைத்தால் இரும்பு அதிக அளவில் உடலில் சேரும்
இரும்புசத்து உள்ள சைவ உணவுகள்:
தினம் ஒரு தேங்காய் உண்டால் சுமார் 10 மிகி இரும்புசத்து கிடைக்கும். தேங்காயில் உள்ல இரும்புசத்து அதிக அளவில் உடலில் சேர்கிறது.
ஹிமாலயன் சால்ட் இரும்புசத்து அதிகம் உள்ள வகை உப்பு. சாதா உப்புக்கு பதில் அதைபயன்படுத்தலாம்.
பீன்ஸ், பருப்புகள். இவற்றுடன் நெல்லிகனி, லெமென் ஜூஸ் முதலானவற்றை உன்டுவந்தால் இரும்புசத்து நுகர்வு அதிகரிக்கும்
பூசணிவிதையில் இரும்பு சத்து உண்டு
பிளாக்சீட் பவுடரிலும் உண்டு. தினம் 2 ஸ்பூன் பிளாக்சீட் பவுடர் உண்டால் 1.2 மிகி இரும்புசத்து கிடைக்கும்
கிணற்றுநீர், இயற்கையான சுனைநீர் ஆகியவற்றில் மண்ணின் தன்மையை பொறுத்து இரும்புசத்து கிடைக்கும். இரும்புகுழாய்களில் வரும் நீரிலும் இரும்புசத்து கிடைக்கலாம். ஆனால் இதை முழுமையாக நம்பி இருக்க முடியாது
மொத்தத்தில் நீங்கள் சைவ பெண்ணாக இருந்து அனிமியா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் இரும்புசத்து சப்ளிமெண்ட் எடுப்பது உத்தமம்

Tuesday, 19 September 2017

மார்பக கட்டியை கரைக்கும்

மார்பக கட்டியை கரைக்கும் இயற்கை மருத்துவம்
தொட்டா சிணுங்கி செடியின் ஏதேனும் ஒரு பாகத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதை ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிக்கட்டி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வந்தால், மார்பக கட்டி விரைவில் கரையும்.
கழற்சிக் காயில் உள்ள ஓடுகளை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பொடி செய்து, அதில் ஒரு பங்கு எடுத்து மிளகு பொடியுடன் சேர்த்து கலந்து அதை தினமும் இரு வேளைகள் உணவுக்கு முன் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், மார்பக கட்டி விரைவில் கரையும்.
ஒரு பாத்திரத்தில் 5 பூண்டு பற்கள் தட்டி போட்டு, அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் இருவேளைகள் குடித்து வந்தால் மார்பக கட்டிகள் கரைந்து, அதன் வலி மற்றும் வீக்கமும் குறையும்.

Monday, 18 September 2017

கைகண்ட [அனுபவ] மருத்துவம்

கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!1
நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.
அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."
சில எளிய மருத்துவம்: !!!
வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.
தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.
வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

Friday, 8 September 2017

உப்பும் மிளகும்

உப்பும் மிளகும் கோவிலுக்கு அல்ல. நமக்கு..
இதை படித்த பின் உங்களை சுற்றி வாழும் ஒரு 12 பேருக்காவது இந்த அறிவியலை புரிய வையுங்கள். முந்தைய தலைமுறை இவற்றை செய்யாமல் விட்டதாலேயே கோவில் பற்றிய ஞானம் அழிந்து வருகிறது.
இன்று பெரும்பாலான கோவில்களில் கொடிமரத்தின் அடியிலும் சிலைகளின் மீதும் உப்பை கொட்டி வழிபடுகின்றனர். இது தவறு. சித்தர்கள் உணர்த்திய உண்மையை அறிந்து கொள்ளாமல் அவர்கள் கட்டிய கோவில் சிலைகளை அரித்து, அழிப்பது நாம் மடையர்கள் என்பதையே காட்டுகிறது. அதன் உண்மையை அறிவோம்.
உப்பின் பிறப்பிடம் கடல். இன்று நிலப்பரப்பாக நாம் வாழும் எவ்விடமும் சில கோடி ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்தவைகளே. மொத்த உலகமே உப்பின் மயம்தான். அவ்வகையில் மண்ணும் மண்ணில் தோன்றும் தாவரங்களும் அவற்றை உண்ணும் புழு, பூச்சிகள், விலங்கு, பறவை, மனிதன் என எல்லாமே உப்பின் வெவ்வேறு வடிவங்கள் தான். ‘உப்பிருந்த பாண்டம்’ என்று சித்தர்கள் உடம்பை பற்றி பாடியதன் பின்னுள்ள அறிவு இதுதான்.
உப்பு ஒரு சுவை என்பதை தாண்டி அதிலுள்ள மின்னாற்றலே உடலையும் மூளையையும் இயக்குகிறது. அடுத்த ஒரு 21 நாட்களுக்கு உப்பில்லாத உணவு மற்றும் உப்பு குறைவாக உள்ள காய்கறி, பழங்களை உண்டு வாருங்கள். உங்களின் உடல் இயக்கத்திலும், சிந்தனையிலும் உள்ள மின்னாற்றல் குறைந்து போகும். சிடு சிடு வென திரியும் பலர் மந்தமாகி போவர். ‘நீ உப்பு போட்டு தானே சாப்பிடுகிறாய்’ என்று ரோஷம் பற்றிய சொல்லாடல் இன்றும் வழக்கில் உள்ளது அதனாலேயே.
உப்பின் அளவு உடலில் அதிகரித்தாலும் உடல் அழியும். உப்பால் அரிக்க முடியாத பொருள் எதுவும் இல்லை. உப்பு ரத்தத்தில் அதிகரிப்பதால் உடலின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. எல்லா வித நோய்களுக்கும் இது தான் தொடக்கம். உடலின் காரத்தன்மையை அதிகப்படுத்தும்போது நோய் நீங்குகிறது. இங்கு காரத்தன்மை என்பது காரச்சுவை அல்ல. சுக்கு, சீரகம், மிளகு, கடுக்காய் ஆகியவற்றில் காரத்தன்மை அதிகம். அதனாலேயே சித்தர்கள் தம் பெரும்பாலான உணவுகளில் இவைகளை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தினர்.
குடும்ப வாழ்க்கையில் உள்ள மக்களுக்கு உப்பும் அதனால் உண்டாகும் உணர்சிகளும் ஒரு அளவில் தேவை. ‘சம்சார கடல்’ என்று உலக வாழ்வை மறைமுகமாக கடலுடன் ஒப்பிட்டது இந்த உப்பின் ஆற்றலை உண்மையை மறைப்பாக உணர்த்தவே சொல்லப்பட்டது. ஞானம் பெற விரும்பும் மனிதர்கள் அவ்வுணர்ச்சிகளை வென்று யோகப்பாதையில் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அதற்கு கருவியாக உள்ள உடலை நீண்ட நாள் பாதுகாக்க வேண்டும். அவர்கள் காரத்தன்மை பற்றிய முழு அறிவும் பெற வேண்டும். இதை கோவிலுக்கு வரும் மக்கள் உணர்ந்து கொள்ளவே இரண்டு மண் கலசங்களில் உப்பும் மிளகும் இட்டு கொடிமரத்தின் அருகில் வைத்து விடுவார்கள். ஆனால் இன்று மக்கள் அவற்றின் பொருள் விளங்காமல் சித்தர்கள் கட்டிய கோவில் கொடிமரங்களையும் சிலைகளையும் அரிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள். இது மடமை அல்லவா. உங்கள் வீட்டு பெண்களிடமும் சிறுவர்களிடமும் இந்த அறிவை புகட்டுங்கள். கோவிலும் காக்கப்படும் அதன் அறிவியலும் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும்.
சித்தர்களும் பெரியவர்களும் ஏன் இத்தகைய அறிவை மறைப்பாக சொல்ல வேண்டும்? ஒன்றை பல வழிகளில் உடைத்து, சேர்த்து, ஆராய்ந்து முடிவினை பெறும்போதுதான் மூளை தன் எல்லைகள் தாண்டி சிந்திக்க முயல்கிறது. கிராமத்து மக்களையும் நகரத்து மக்களையும், ஞானிகளையும் ஒப்பிட்டு பாருங்கள். மூவருக்கும் உள்ள வேற்றுமைகள் புரியும். மக்கள் ஏதோ சாதாரணமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிடவில்லை நம் முன்னோர். அப்படி சாதாரண வாழ்வு வந்தால் மீண்டும் மீண்டும் இங்கு மனிதராய் பிறந்து உழன்று கொண்டே இருப்பார்கள். உச்ச கட்ட அறிவில் வாழ்ந்து மனித வாழ்வு தாண்டி தெய்வத்தன்மை என்ற மேல்நிலை அடையவே இத்தகைய வாழ்வு முறைகள். பகுத்து ஆராய்பவர்கள் மென்மேலும் முன்னே போகட்டும். சிவ! சிவ!
குறிப்பு: உங்கள் சுற்றியுள்ளவர்களிடம் இதை விளக்கி கோவில் சிலைகளை பாதுகாத்திடுங்கள். நம் முன்னோர் நமக்காக விட்டு சென்ற சொத்துக்களை அழிய விடாதீர்கள்.

Wednesday, 6 September 2017

லக்னங்களின் பொது பலன்கள்

லக்னங்களின் பொது பலன்கள்

மேஷ லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர் செல்வங்களை சேர்ப்பதில் கருத்துள்ளவராக இருப்பார். அறிவும் அழகும் பொருந்தி இருக்கும். பிறரிடம் பழகுவதில் சௌஜன்யமாக இருப்பார். பலர் விரும்பும் வண்ணம் நடந்து கொள்வார்.
மேஷ லக்னத்தில் சுபர்கள் இருக்க அல்லது சுபர்களால் பார்க்க பூரண ஆயுளுடன் இருப்பார் என்று சொல்லலாம். இவர்களுக்கு சூரியன், குரு சுபர்கள். குருவோடு சனி சம்மந்தப்பட்டால் குரு எப்போதும் தன் பலனையே கொடுப்பார். சூரியனும், குருவும் யோகக்காரர்கள்.இருவரும் ஒன்றாக கூடினால் நல்ல பலன்களையே கொடுத்து வருவார்கள். புதன், சுக்கிரன், சனி இம் மூவரும் இவர்களுக்கு பாவிகள். புதன் மூலம் மாரகம் (மரணம்) இல்லை. சனி, சுக்ரன் மூலம் மாரகம் ஏற்படும்.

ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர் செல்வச் சீமானாக வாழும் அமைப்பு இருக்கிறது. நல்லவளும் அழகுள்ளவளுமான மனைவியை அடைந்து சந்தோச வாழ்க்கை அனுபவிப்பர். எப்போதும் கூடுமானவரை மன நிம்மதியுடனேயே வாழ்வார். கணக்கில் வல்லவராக இருப்பார். ரிஷப லக்னத்திற்கு சூரியனும், சனியும் நல்லவர்கள். லக்னத்தில் இந்த சுபர்கள் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் 75 என்று சொல்லலாம். குரு, சுக்கிரன், சந்திரன் பாவிகள். சனி ஒருவரே இவர்களுக்கு ராஜயோகம் கொடுப்பார்.
செவ்வாய், புதன் மாரகர்கள். இவர்களுடன் பலம் பொருந்திய கிரகங்கள் இருந்தால் இவர்கள் மூலம் மாரகம் இல்லை.

மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எப்ப்போதும் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருப்பர்.  எல்லோருடனும் இனிய வசனங்களே பேசுவார். மங்கையர்களை அதிகமாக விரும்புவார். அவர்கள் மூலம் அடையும் இன்பத்தை பெரிதும் விரும்புவார். இவர்களுக்கு கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உண்டு. பெண்கள் இவரைப் பார்த்து ரசிக்கும் தன்மையுடன் இருப்பார்.
மிதுன லக்னத்திற்கு குரு, செவ்வாய், சூரியன் மூவரும் கெட்டவர்கள். குருவுடன் சனி  சேர்ந்தால் யோககாரனாவான். சந்திரன் தோசமுடையவன். எனினும் மாரகனாக மாட்டான். குரு, செவ்வாய், சூரியன் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். எதற்கும் இவர்களது வலுவை அறிந்து எதையும்  சொல்ல வேண்டும்.

கடக லக்னம்
கடக லக்னத்தில் பிறந்தவருக்கு வேறு பெண்கள் பேரில் நாட்டம் இருக்கும் என்று சொல்லலாம். தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்பு கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு சிறிது கெட்ட பெயர்கள் உண்டாகலாம். தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை இருக்கும். செல்வங்கள் இவர்களை வந்தடையும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
கடக லக்னத்திற்கு செவ்வாயும், குருவும் சுபர்கள். செவ்வாய் யோகா காரகன். செவ்வாயும் குருவும் சேர்ந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுத்து வாழ்கையை உயர்த்துவார்கள். சூரியன், புதன், சுக்கிரன்  மூவரும் பாவிகள். சனி, சுக்கிரன், புதன் மாரகாதிபதிகள். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்

சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள்.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள். சுக்ரனும், புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்ரன் கூடி இருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள். சுக்ரன், சனி , புதன் இவர்கள் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப பல சமயங்களில் மற்றவர்களுக்கு சிம்ம ஸ்வரூபமாகவே விளங்குவார்கள்.

கன்னி லக்னம்
சற்று அடக்கமாக இருப்பார்கள். எதிலும் திறமைசாலிகளாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இருக்கும். நல்ல நடத்தை உள்ளவர்களாகவும் விளங்குவார்கள்.
கன்னி லக்னத்திற்கு சந்திரனும், சனியும் சுபர்கள். செவ்வாய், குரு பாவிகள். புதனும், சுக்கிரனும் யோககாரர்கள். புதனும் சுக்கிரனும் கூடி வலிமை பெற்றிருந்தால் நல்ல யோகத்தை கொடுப்பார்கள். சந்திரன், செவ்வாய், குரு இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள். இவர்கள் திறமைசாலிகள் என்று பெயரெடுத்து  புகழுடன் விளங்குவார்கள்.

துலா லக்னம்
தாரசு பிடிக்கும் தொழில் ஏற்படும். தராசு போல பேசுவார்கள். வியாபாரத்தில் சாமர்த்தியம், புத்திசாலிதனம், செல்வம் சேர்பதில் கவனம். எதிலும் முன் ஜாக்கிரதை இருக்கும். செல்வங்கள் சேரும். வாழ்கையில் சுகங்கள் அனுபவிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆயுள் நீண்டது என்றே கூற வேண்டும்.
துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சூரியன், செவ்வாய், குரு பாவிகள். சந்திரனும், புதனும் யோகக்காரர்கள். சந்திரனும், புதனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். சூரியன், குரு மாரகாதிபதிகள். செவ்வாய் தோஷம் உடையவர்.

விருச்சிக லக்னம்
விருசிக லக்னதில் பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சி உள்ளவராக இருப்பார். பெண்களின் மீது அன்பு வைத்திருப்பார். சற்று முன்கோபம் என்பது இருக்கும், செல்வன் என்று பெயர் எடுப்பர். எடுத்த காரியத்தை விரைவுடன் செய்யும் ஆற்றலுடையவராக இருப்பார். கொஞ்சம் அவசர குணம் இருக்கும்.
விருசிக லக்னத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள். லக்னத்தை சுபர்கள் பார்க்க இவர்கள் 9௦ வயது வரையில் வாழ்ந்து இருப்பார்கள் என்று கூறலாம். சூரியனும், சந்திரனும் கூடினால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். செவ்வாய், புதன், சுக்கிரன் மாரகாதிபர்கள். குருவும், சனியும் கொள்ள மாட்டார்கள். புதனும் கொள்ள மாட்டார். மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்.

தனுசு லக்னம்
தனுசு லக்னத்தில் பிறந்தவர் நல்ல அறிவுள்ளவராகவும் சொத்துக்கள் உள்ளவராகவும் இருப்பார். மனைவியிடம் அன்புடன் பழகி அவளுடைய நல்லெண்ணத்தையும் பெறுவார். மற்றவர்களுடன் இனிய சுபாவத்துடன் பழகுவார்.
தனுசு லக்னத்திற்கு சூரியனும், செவ்வாயும் சுபர்கள். சுக்கிரன் ஒருவரே பாவி. சூரியனும், புதனும் யோகக்காரர்கள். இருவரும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். சுக்கிரனும், புதனும் கூடினால் மாரகாதிபதியாவான். சுக்ரனுக்கு மாரகம் கொடுக்கும் வல்லமை உண்டு. சந்திரன், சனி கொல்ல மாட்டார்கள். மற்ற கிரகங்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

மகர லக்னம்
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பலதரப்பட்ட வாழ்க்கை அமையும். நல்ல வஸ்திரங்கள் அணிவது, ஆடை ஆபரணங்கள் சேர்க்கையில் ஆசை இருக்கும். பெண்கள் இன்பத்தில் நாட்டம் இருக்கும். சாதூர்யதுடன் பேசுவர். முன்னேற்றத்தை கருதி பல திட்டங்கள் போட்டு கொண்டே இருப்பார்கள்.
மகர லக்னத்திற்கு செவ்வாய், புதன், சுக்கிரன் சுபர்கள். சந்திரன், குரு பாவிகள். சுக்ரன் யோககாரகன். சுக்ரனும், புதனும் கூடினால் ராஜயோகம் கொடுப்பார்கள். சூரியனும், சனியும் மாரகம் கொடுக்க மாட்டார்கள். சந்திரனுடன் சேர்ந்த சனி மாரகாதிபன். இவர்கள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிருக்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.

கும்ப லக்னம்
கும்ப லக்னத்தில் பிறந்தவர் மனைவியிடம் அன்புள்ளவராக இருப்பார். தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவராக இருப்பார். பெண்கள் பால் அதிக அன்பும், பரிவும் காட்டுபவராக இருப்பார். கல்வி கேள்விகளில் பூரண பலன் இருக்காது. சில சமயங்களில் கர்வம் அதிகமுள்ளவராக பிறருக்குத் தோற்றமளிப்பார்
கும்ப லக்னத்திற்க்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சந்திரன், செவ்வாய், குரு பாவிகள், சுக்கிரன் யோககாரகன். செவ்வாயும், சுக்ரனும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள். குரு மாரகம் கொடுக்க மாட்டன்.. செவ்வாய், சந்திரனுடன் கூடி இருந்தால் மாரகம் கொடுப்பான். மாரகதிபதிகள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.

மீன லக்னம்
முன்னோர்கள் தேடி வைத்த பொருள்களை அழித்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டு விடலாம். தன் காரியங்களை பிறர் அறியாமல் ரகசியமாக பாதுகாத்து கொள்வதில் ஜாக்கிரதை உள்ளவராக இருப்பார். அதிக திறமை உள்ளவராகவும் காணப்படுவார்.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், சனி பாவிகள். செவ்வாயும், குருவும் யோகக்காரர்கள். இவர்கள் கூடியிருந்தால் பிரபலமான ராஜ யோகத்தை கொடுப்பார்கள். சூரியன், சந்திரன், புதன், சனி மாரகாதிபர்கள்.