இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன.
தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.
ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.
சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.
எலுமிச்சை, எலுமிச்சங்காய்
எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.
புதினா
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
இஞ்சி
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.
தண்ணீர்
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.
குறிப்பு
மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.
ஜூஸ் செய்யும் முறை
1 வெள்ளரிக்காய்
5 எலுமிச்சை
1 எலுமிச்சங்காய்
15 புதினா இலைகள்
2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
2.5 லிட்டர் தண்ணீர்
வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.
இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.
Tuesday, 10 May 2016
தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.
Wednesday, 4 May 2016
ஈறு வீக்கமா இதை ட்ரை பண்ணிப் பாருங்க
ஈறு வீக்கமா இதை ட்ரை பண்ணிப் பாருங்க !!!
.
ஈறு பிரச்சனை என்பது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எதிர்கொள்ளும் பிரச்சனை. ஈறுதான் நம் பற்களின் வேர்களை வெளிபுறத்திலிருந்து பாதுகாக்கின்றன. எப்போது வேரில் தொற்று ஏற்படுகிறதோ அல்லது பற்களில் பாதிப்பு ஏற்படுகிறதோ, அப்போது ஈறுகளில் வீக்கமாய் அவைகள் பிரதிபலிக்கும்.
ஈறு வெளிர் அல்லது அடர் பிங்க் நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாறினால், ஈறுகளில் பிரச்சனை உள்ளது என அறியலாம். இதனால், ஈறு வீக்கமடைந்து, வலி ஏற்படும். பல் விளக்கும் போதும் , சாதரணமாகவும், ரத்தக் கசிவு ஏற்படும்.
ஈறு வீக்கத்திற்கு காரணங்கள்:
பொதுவாக ஈறு வீக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஈறு அழற்சி(gingivitis), ஊட்டச் சத்து குறைபாடு, தொற்று நோய் மற்றும் கர்ப்ப காலத்திலும் ஏற்படும். இது அல்லாமல் புகைபிடித்தல், தவறான முறையில் பல் கட்டுதல், தவறான முறையில் பல் விளக்குதல் என பல காரணங்கள் உள்ளன நல்ல அனுபவம் வாய்ந்த பல் மருத்துவரிடம் , பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஈறு வீக்கத்திற்கு வீட்டிலேயே நிவர்த்தி செய்வது எப்படி?
கூடுமான வரையில் ஈறு வீக்கத்தையும் வலியையும் வீட்டிலேயே சரி செய்யலாம். அதற்கான வழிமுறைகள் கீழே!!
உப்பு நீரில் கொப்பளித்தல்:
ஈறு வீக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் வெது வெதுப்பான உப்பு நீரில் கொப்பளித்தால் பல் வலி மற்றும் ஈறு வலி வராது. உப்பு சிறந்த கிருமி நாசினி. அது பற்களின் வேர் வரை சென்று கிருமிகளை அழிக்கிறது.
சூடான மற்றும் ஐஸ் ஓத்தடம்:
சூடான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து , பிழிந்து முகத்தில் ஈறு வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் வைக்கலாம். அதேபோல், ஐஸ் பேக் அல்லது ஐஸ் கட்டியை துணியில் சுற்றி வீக்கம் இருக்கும் பகுதியில் வைக்கலாம். இதனால் வலி குறையும்.
ஹைட்ரஜன் பெராக்ஸைட்:
இது கிருமி நாசினி. பல் சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்க்கும். ஈறு வீக்கத்திற்கும், வலிக்கும் மிக நல்லது. ஹைட்ரஜன் பெராக்ஸைடை கடையில் கேட்கும் போது 3% என கேட்டு வாங்க வேண்டும்.
உபயோகப்படுத்தும் முறை:
3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை சம அளவு நீரில் எடுத்துக் கொண்டு,வலி இருக்கும் ஈறின் மேல் நனைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும் ஒரு ஸ்பூன் சோடா உப்புடன் தேவையான அளவு ஹைட்ரஜன் பெராக்ஸைடை கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அதனை வீக்கம் அல்லது வலி இருக்கும் இடத்தில் தேய்த்து ஒரு நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும்.
குறிப்பு: ஹைட்ரஜன் பெராக்ஸைடை விழுங்கக் கூடாது.
மஞ்சள்:
மஞ்சள் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது. ஈறில் ஏற்படும் தொற்றுக்களுக்கு மருந்தாகும். மஞ்சளை நீருடன் கலந்து பேஸ்ட் போல செய்து, வீக்கம் இருக்கும் இடத்துல் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும் ஐந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும். இதை தினமும் இருமுறை செய்யலாம்.
டீ பேக் (Tea Bags)
தேயிலையில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது..ஈறு வீக்கத்தினை கட்டுப்படுத்தும்.
சூடான நீரில் டீ பேக்கை அமிழ்த்தவும் சில நிமிடங்கள் கழித்து டீ பேக்கை எடுக்கவும்.
பொறுக்கும் சூட்டில் வாயினுள் வீக்கம் இருக்கும் பகுதியில் ஒத்தடம் தரவும்.
பின்னர் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும்.
தினம் ஒரு அல்லது இருமுறை செய்யலாம்.
சோற்றுக் கத்தாழை:
இது வீக்கத்திற்கு நல்ல மருந்து. ரத்தக் கசிவை நிறுத்தும்.தொற்
றுக்களிலிருந்து காப்பாற்றும்.
சோற்றுக் கத்தாழையினுள் உள்ள ஜெல் பகுதியை எடுத்து வலி உள்ள இடத்தில் மெதுவாக தேய்த்து மஸாஜ் செய்யவும்.
இரு நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கவும். இதை நீங்கள் தினமும் செய்யலாம்.
தேயிலை எண்ணெய்:
தேயிலை எண்ணெய் சிறந்த ஆன்டி பயாடிக் ஆகும். தொற்றுக்களை வேகமாய் அழிக்கிறது. மேலும்,ஈறு எரிச்சலிலிருந்தும் விடுதலை அளிக்கிறது.
தேயிலை எண்ணெய் சில சொட்டுக்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவும். தினம் இருமுறை செய்யலாம்.
தேயிலை எண்ணெய் கொண்ட பற்பசையை கடையில் வாங்கி உபயோகிக்கலாம்.
குறிப்பு-தேயிலை எண்ணெயை விழுங்கக் கூடாது. இது வயிற்றுப் பிரச்சனைக்கு வழி வகுக்கும்.
ஆயில் புல்லிங்:
ஆயில் புல்லிங் ஈறு சம்பந்தமாக மட்டுமின்றி உடலின் எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லதாகும். ஈறின் வழியே ரத்த நாளங்களில் ஊடுருவி நோய்களை நிவர்த்தி செய்கிறது. ஆலிவ், நல்லெண்ணெய் போன்ற ஏதாவது சுத்தமான எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி, ஈறின் உள்ளே செல்லும்படி சில நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் வெண்மை நிறமாக மாறும் வரை கொப்பளிக்க வேண்டும். பல் விளக்குவதற்கு முன்னர் இதை செய்யவும்.
விட்டமின் D :
உடலில் கால்சியம், பாஸ்பரஸ் பற்றாக்குறையினால், பற்களில் பிரச்சனைகள் வரலாம். கால்சியம் நம் உடலில் உறிய விட்டமின் D இன்றியமையாததாகும். எனவே விட்டமின் D நிறைந்த உணவுகளை உண்டால் பற்கள், எலும்புகள் உறுதி பெறும், ஈறு பலப்படும்.
ஊட்டச் சத்து:
போதிய அளவு ஊட்டச் சத்து இல்லையெனில் முதலில் பாதிப்பது பற்களும் ஈறுகளும்தான். ஆதலாம் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம். தினமும் பழங்கள்,கீரைகள் ,காய்கறிகள்,ப்ரொட்டீன் நிறைந்த உணவுகள் உண்ண வேண்டும்.
மேலும் சில பொதுவான குறிப்புகள்:
தினமும் பல் இருமுறை, முக்கியமாக இரவில் விளக்க வேண்டும்.
மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான உணவினை தவிர்க்கவும்.
புகையிலை உபயோகித்தல் பற்களை மிகவும் பாதிக்கும்.
செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணக் கூடாது.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருதுவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
உடலின் ஆரோக்கியம் உங்கள் பற்களில் தெரியும். பற்களின்ஆரோக்கியம் உங்களின் உடலில் பிரதிபலிக்கும். ஆகவே எதுவும் வரும் முன் காப்பது உகந்தது
Tuesday, 3 May 2016
மசாலா பொடி வகைகள்!
மசாலா பொடி வகைகள்!
பருப்புப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 6, மிளகு - ஒரு
தேக்கரண்டி, பெருங்காயத்தூள் -
சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அடுத்து கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து,
மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் பருப்புப் பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து
சாப்பிட சுவையாக இருக்கும்.
•••
பூண்டுப்பொடி
தேவையானவை: பூண்டு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10, உளுத்தம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு: பூண்டு, வாயுத் தொல்லையை நீக்கும். இதய நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.
•••
இட்லி மிளகாய்ப்பொடி
தேவையானவை: காய்ந்த
மிளகாய் - 100 கிராம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தலா - ஒரு கிண்ணம், எள் - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2
தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எள்ளையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, அதனுடன் வறுத்த எள், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
•••
மிளகு சீரகப்பொடி
தேவையானவை: மிளகு, சீரகம் தலா - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்
தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது தேவையான உப்பு சேர்த்து கலந்து உண்ணவும்.
குறிப்பு: இந்தப் பொடியை ரசம் தயாரிக்கும்போதும் பயன்படுத்தலாம்.