தினம் ஒரு கப் தக்காளி சூப் :
விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர்.
ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது..
சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் – அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் – வராம தவிர்க்கலாம்….
தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.
5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.
6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.
7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
நன்றி : தமிழ்டாக்டர் இணைய தளம்.
Tuesday, 29 August 2017
தக்காளி சூப் :
Sunday, 6 August 2017
டெங்குவை குணப்டுத்துகின்றது
#உடனடி_நிவாரணம்
டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.
அது என்ன வென்று தெரியுமா?
பப்பாளி மரத்தின் கொழுந்து இலையின் சாற்றை நீர் கலக்காமல் எடுத்து நோயாளி அருந்த வேண்டும்.
சிறுவர்கள் ஒரு மேசைக்கரண்டி அளவும், பெரியோர் இரண்டு மேசைக்கரண்டி அளவும் அருந்தலாம்.
ஆச்சர்யம் ஆனாலும் உண்மை. சிறுது நேரத்திலேயே உடலில் மாற்றம் ஏற்பட்டு குணமடைவதைக் காணலாம்.
இந்த பார்மூலாவை பயன்படுத்தி #பெப்ரிக்கா பில்ஸ் என்று டெப்லட்டுகளும் இலங்கையில் தயார் செய்யப்பட்டு விட்டது.
இதனை நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாது பகிருங்கள்
கெரிகா பப்பாயா லீஃப் எக்ஸ்ட்ராட் டெப்லட் என்னும் இந்த மருந்து 48 மணித்துளிகளில் டெங்குவை குணப்டுத்துகின்றது...
தினம் ஒரு மூலிகை
*🌹தினம் ஒரு மூலிகை🌹*
ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.
*🍁திங்கள் – அருகம்புல்☘*
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
*🍁செவ்வாய் – சீரகம்☘*
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
*🍁புதன் – செம்பருத்தி☘*
இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
*🍁வியாழன் – கொத்துமல்லி☘*
ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
*🍁வெள்ளி – கேரட்☘*
ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.
*🍁சனி – கரும்பு சாறு☘*
கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.
*🍁ஞாயிறு – இளநீர்☘*
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.