Thursday, 30 June 2016

பெண்களுக்கான அற்புதமான வர்மம்”

“பெண்களுக்கான அற்புதமான வர்மம்”

          தொப்புளிலிருந்து பத்து விரல் அளவு நேர் கீழே அமைந்துள்ள வர்மம் “குடுக்கை வர்மம்” ,இந்த வர்மத்தில் கட்டை விரலைக்கொண்டு லேசாக மூன்று முறை அழுத்தி விடவும் ,அதன் பின் அடிவயிற்றை மூன்று முறை தடவி விடவும் ,இதன் பயன்: பெண்களுக்குக்கு வரக்கூடிய மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும், அதிக இரத்தப்போக்கு சீராகும், மாதவிடாய் வயிற்று வலியை போக்கும், கர்பப்பையில் உள்ள நீர் கட்டிகள் நீங்கும்,கரு முட்டை முதிர்ச்சி அடைய உதவியாக இருக்கும்,பெண் இன உறுப்பு குறைபாடுகள் நீங்கும்.

  ் நன்றி.

Wednesday, 29 June 2016

அமேசான்

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

வருடமெல்லாம் கொட்டும் மழை!

சூரிய வெளிச்சமே பார்க்காத தரை!

மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை  பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு! 

அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!!

இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்!

ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.

இந்த காடுகள் ஆபத்தானவை.

இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது!

இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.

இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்!!

இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.

இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.

இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது.

முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.

அமேசான் நதி பிறக்‍கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்‍ கொண்டு கடலில் சென்று கலக்‍கிறது.

'இங்கு இருக்‍கும் 90 சதவீதத்துக்‍கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை' என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்‍கு உணர்த்தும்.

------------------------

அமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை! 

இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்!

எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.

1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை!

அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்.

மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.

ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது!

மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.

முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.

பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்லலாம்.

சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.

அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.

பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.

-------------------

''அமேசான் மழைக்காடுகள்''

அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது.

சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.

பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.

பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான்.

மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது.

இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.

உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு,  உலகில் உள்ள ஒரு கோடிக்‍கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்‍கும் மேல் இருக்‍கின்றன.

3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்‍கள் இந்த காடுகளில் உள்ளன.

உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.

எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்.

அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.

ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.

--------------------------

அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.

இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.

கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது,  வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்.

இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்‍களை சேர்ந்த மக்‍கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்!

இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.

காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்.

ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.

ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்.

ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்.

அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.

----------------------------

உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன.

பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன.

இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது. 

இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.

தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.

அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்.

ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு.

இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.

---------------------------

அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது!

இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.

அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.

சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு,  ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது!

நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.

----------------------------

குளிரான  அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.

4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.

அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது.

உடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.

இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது.

100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது.

விலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி.

இது சிறிய ஆறு.

ஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு.

ஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.

வெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

திருஅருட்பா

ThiruArutpa :- திருஅருட்பா 

  (பாவங்களின் 42 வகை)
வள்ளலார் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
அவை வருமாறு:
******************************
மனுமுறை கண்ட வாசகம்
******************************

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது. 
                                                                                       👆 - VALLALAR.  📚

சுந்தரர்

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

               🙏� *சுந்தரர்* 🙏�

1).பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்?
மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

2). நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை,
பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன், பெறல் ஆகா அருள் பெற்றேன்,
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

3). மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை; பொன்னே, மணிதானே, வயிர(ம்)மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

4). முடியேன், இனிப் பிறவேன், பெறின் மூவேன்,
பெற்றம் ஊர்தீ!
கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்,

நீ! செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

5). பாதம் பணிவார்கள் பெறும் பண்டம்(ம்) அது பணியாய்!
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன், அருளாளா!
தாது ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

6). தண் ஆர் மதிசூடீ!
தழல் போலும் திருமேனீ!
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண(ந்)நகை செய்தாய்!
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

7). ஊன் ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்; வான் ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்,

மலை ஆனாய்; தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள் ஆனாய்!
உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

8). ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்!
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர் வான் நீர்
ஏற்றாய்! பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

9). மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கை பங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே;
செழு வார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அழகா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

10). கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக் கையால் பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி,
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே?

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

வீணா தட்சிணாமூர்த்தி

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

பெயர்:
*வீணா தட்சிணாமூர்த்தி*

வாகனம்:
*நந்தி தேவர்*

மூர்த்த வகை:
*மகேசுவர மூர்த்தம்*

                  👌�🙏�👌�

*விளக்கம்*
~~~~~~

       🙏�*சிவபெருமான்* 🙏�

நாரத முனிவருக்கும்,
சுக்ரமுனிவர்களுக்கும் இசையைப் பற்றி கற்பித்த உருவம் ,
*வீணா தட்சிணாமூர்த்தி* என்று அழைக்கப்படுகிறது.

*தோற்றம்*
~~~~~~~

*இத்தோற்றத்தில் வீணையைக் கையில்* *ஏந்தியவராகத்*
*தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்*

*உருவாக் காரணம்*
~~~~~~~~~~~~

திருக்கையிலையில் பக்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள் செய்ய *தட்சிணாமூர்த்தியாக* எழுந்தருளினார்.

அப்போது நாரதர்.
சுக்ரமுனிவர்களின், இசைஞானத்தை உணரவும்,

*சாமவேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப்பாடவும் தங்களுக்கு அருள்புரிய வேண்டினார்.*

உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையையும், இசைக்கலையைப் பற்றியும் கூறத் தொடங்கினார்.

*அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும்*
*அதனால் என்னப் பலன், என்றும்*

*எம்மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக்குற்றம் ஏற்படுமென்னும் விளக்கிக்கொண்டு வந்தார்*

*கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றார்*

அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட நால்வகை வீணைகளையும் செய்யலாம் என்றார்.

அந்த நால்வகை வீணையாவன ,

*பேரியாழ்*

*மகரயாழ்*

*சகோடயாழ்*

*செங்கோட்டியாழ்*

என்பனவாகும்.
(யாழ் என்பது வீணை)

இதில் . . . ,

*பேரியாழுக்கு 21 நரம்பும்*

*மகரயாழுக்கு 17 நரம்பும்*

*சகோடயாழுக்கு 16 நரம்பும்*
*செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும்*
இருக்கவேண்டும்.

மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல், பரிவட்டனை,

*ஆராய்தல்*
*தைவரல்*
*செலவு*
*விளையாட்டு*
*கையூழ்*
*குறும்போக்கு*

என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும் என்றார்.

முக்கியமான வீணையுடன் பாடும்போது உடல் குற்றம் இல்லாமலும்,

பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும் என்பது மரபு,

இவ்வாறாக வீணையைப் பற்றியும்,

இசையைப் பற்றியும், அதன்

பாடல்களைப் பற்றியும்,

அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் விரிவாகக் கூறி ,

அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக்காட்டினார்.

இதனைக்கண்ட,
கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர்.

இவ்வாறு நாரதருக்கும் சுக்ரமுனிவர் பொருட்டு வீணையுடன் காட்சிதருவதால்,

அவர்க்கு ,

*வீணா தட்சிணாமூர்த்தி* என்றப் பெயர் உண்டானது.

*தரிசன இடங்கள்*

திருச்சிக்கருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள, *சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தி இருக்கின்றார்*.

இவரை வணங்கினால் உயர்பதவி,
கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார்.

வியாழக்கிழமைகளில் இவர்க்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும்.

வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும்.

மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

பக்தி பாமாலை

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

******____ பக்தி பாமாலை ____******

பாடல்:
*அருணாசலனே ஈசனே*

பாடியவர்: *திரு.S.P.பாலசுப்ரமணியம்*

வெளியீடு:
*சுபம் ஆடியோ விஷன்*.

                👌�🙏�👌�

தணலாய் எழுந்த சுடர் தீபம்
அருணாசலத்தின் சிவ யோகம்
ஒளியாய் எழுந்த ஓங்காரம்
உன் கோலம் என்றும் சிங்காரம்...

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா

அருணாசலனே ஈசனே...
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே ஈசனே...
அன்பே சிவமான நாதனே...
குருவாய் அமர்ந்த சிவனே...
ஒன்றாய் எழுந்த சிவனே...

மலையாய் மலர்ந்த சிவனே...
மண்ணால் அமர்ந்த சிவனே...
அருணை நிறைந்த சிவனே...
அருளை வழங்கு சிவனே...
அருணை நிறைந்த சிவனே...
அருளை வழங்கு சிவனே...

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா

அருணாசலனே ஈசனே...
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே ஈசனே...
அன்பே சிவமான நாதனே...

ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே...
ஓம் ஓம் ஓம் ஓம்
உன் புகழ் செவிகளில் சேருதே...
உள்ளம் பரவசம் ஆகுதே...
உன் புகழ் செவிகளில் சேருதே...
உள்ளம் பரவசம் ஆகுதே...
நான் யார் என்றேன் நடமிடும் ஈசனே..

நாகாபரணம் சூடிடும் சிவனே...
எங்கும் நிறைந்த சிவனே...
எதிலும் உறைந்த சிவனே...
எல்லாம் அறிந்த சிவனே...
ஏழைக்கிறங்கும் சிவனே...
உன்னை நினைந்து உருகும் எனக்கு...
அருள்வாய் அருணாசலனே....

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே ஈசனே...
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே ஈசனே...
அன்பே சிவமான நாதனே...

கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே...
ஓம் ஓம் ஓம் ஓம்
கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே....
சிவ சிவ என்றும் நாமமே...
சிந்தையில் இனிமை சேர்க்குதே...
சிவ சிவ என்றும் நாமமே...
சிந்தையில் இனிமை சேர்க்குதே...
தீயின் தூணாய் நிறைந்திடும் ஈசனே...

லிங்கோத் பவனே...
சோனை நிவாசனே...
தணலாய் எழுந்த சிவனே...
புணலாய் குளிர்ந்த சிவனே...
மணலாய் மலர்ந்த சிவனே...
காற்றாய் கலந்த சிவனே...
வாணாய் வளர்ந்து எண்ணில் நிறைந்து...
சுடறும் அருணாசலனே...

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா

அருணாசலனே ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
குருவாய் அமர்ந்த சிவனே...
ஒன்றாய் எழுந்த சிவனே...

மலையாய் மலர்ந்த சிவனே...
மண்ணால் அமர்ந்த சிவனே...
அருணை நிறைந்த சிவனே...
அருளை வழங்கு சிவனே...
அருணை நிறைந்த சிவனே...
அருளை வழங்கு சிவனே...

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா

அருணாசலனே ஈசனே...
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே ஈசனே...
அன்பே சிவமான நாதனே...

ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா

*ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர*
*ஓம் ஜெய சங்கர சாமசிவா*
*ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர*
*ஓம் ஜெய சங்கர சதாசிவா*

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏