Tuesday, 21 August 2018

பிரச்சினை தீர்க்கும் தலம்

மார்பு புற்று நோய் - கருச்சிதைவு - கர்ப்பம் (குழந்தை) வளர்ச்சி அடையாத பிரச்சனை தீர்க்கும் திருத்தலம் !

இடுசுரை கர்ப்பம் - ஒரு பெண்ணின் கர்ப்பப்பை அல்லாது வேறு இடத்தில் கர்ப்பம் தாங்கும் முறையைக் குறிக்கும் சித்த மொழியாகும்.
தாயுமான சுக சித்தரின் திருஉருவச் சிலையை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்தில் இன்றும் தரிசித்து பயன்பெறலாம். குழந்தைப் பேறு இல்லாதவர்களும், கர்ப்பம் தாங்கிய பின் போதுமான வளர்ச்சி அடையாத குழந்தைப் பேறால் வருந்துவோரும், கர்ப்பம் தாங்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு பலம் இழந்தோரும் நற்சந்ததி பெற இப்பெருமானை வணங்கி இளநீர் தானம் அளித்து வந்தால் தங்கள் குறைபாடுகள் நீங்கப் பெறுவர்.

திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீவடிவுடைநாயகி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலத்திற்கு முன் தோன்றிய பெருமையை உடையது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்குப் பின் அத்தம்பதிகள் வெகுநாட்களாக குழந்தை பேறில்லாமல் இருந்தார்கள் அல்லவா? பின்னர் ஐயர்மலை ஈசனருளால் அந்தத் தெய்வீக தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. ஆனாலும், கர்ப்பத்தில் இருந்த குழந்தைக்கு போதிய உடல் வளர்ச்சி இல்லாததை அறிந்த அரண்மனை ராஜ வைத்தியர்கள் மீனாட்சி அம்மனை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்திற்கு சென்று வருமாறு வேண்டினர்.

அக்காலத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்தில் தாயுமான சுக சித்தர் என்று திருநாமம் தாங்கிய ஓர் அற்புத சித்த பிரான் அங்கு தவம் இயற்றி வந்தார். அவருடைய தவம் என்னவென்றால் யாருடைய கர்ப்பத்தில் குழந்தை போதுமான வளர்ச்சி இன்றி இருக்கிறதோ அவர்கள் இப்பெருமானை வேண்டினால் அவர்களுடைய கர்ப்பத்தில் உள்ள சிசுவை இவர் தன்னுடைய வயிற்றுக்கு மாற்றிக் கொண்டு விடுவார். சரியாக 54 நாட்கள் கழிந்ததும் மீண்டும் அக்குழந்தைக்கு உரிய தாய்க்குக் குழந்தையை மாற்றி விடுவார்.

இந்த இடுசுரை சித்தியை பிரயோகம் செய்ய உதவும் மூலிகைகளும் உண்டு. இந்த அற்புதமான மூலிகைகள் வெள்ளியங்கிரிப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. குள்ளகா, மப்புகா என்ற மலை வாழ் இன மக்கள் மட்டுமே இந்த மூலிகைகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். தங்களின் அன்புக் காணிக்கையாக இத்தகைய மூலிகைகளை தாயுமான சுக சித்தருக்கு அவ்வப்போது அவர்கள் அளித்து வந்தனர்.

அத்தகைய அற்புத மகானை ஸ்ரீசுந்தர பெருமானும் மீனாட்சி தேவியும் வணங்கி தங்கள் குறையைத் தெரிவிக்கவே சித்தபிரானும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று மீனாட்சி தேவிக்காக 54 நாட்கள் கர்ப்பம் தாங்கி உக்கிர வழுதி பாண்டியனைப் பெற்றெடுக்க அற்புத சேவை புரிந்தார்.

தற்காலத்தில் போதுமான வளர்ச்சி அடையாத குழந்தைப் பேறு உடையவர்கள் அதை அழித்து விடுவதைக் காண்கிறோம். இது தெய்வீகத்திற்கு முற்றிலும் ஏற்புடையது அன்று.
இத்திருத்தலம் பெண்களின் மார்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் குறிப்பாக மார்பு புற்று நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஸ்ரீதன சக்திகள் பொலியும் தலமாகும். இத்தல அம்பிகைக்கு உருண்டை மஞ்சள், கொம்பு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்ற மூன்று வித மஞ்சளை கையால் அரைத்து அபிஷேகம் நிறைவேற்றி வந்தால் பெண்களுக்கு வரக் கூடிய அனைத்து நோய்களுக்கும், சிறப்பாக மார்பு சம்பந்தமான நோய்களுக்கு எளிதில் நிவாரணம் கிட்டும். தாய்மைப் பேறு அடைந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் ஏங்கினால் அவர்களுக்கு இத்தகைய வழிபாடு உறுதுணை புரியும். (Source - http://www.kulaluravuthiagi.com/thala.html)

Sunday, 19 August 2018

மூட்டு வலி குணமாக

மூட்டு வலி , எலும்பு தேய்மானம் எதனால்?

இன்று நாற்பது வயதை எட்டிவிட்டாலே போதும் சர்க்கரை இருக்கிறது... எலும்பு தேய்ந்து விட்டது என்று ஒவ்வொரு நேரத்திற்கும் கலர் கலராய் மாத்திரைகள் சாபிடுவோர் அதிகம். எந்த ஒரு நோய்க்கும் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாக வேண்டும் .ஆனால் குணமாகிறதா? இல்லை தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.
முப்பது வருடங்களுக்கு முன்பு இத்தனை ஆர்த்தோ மருத்துவமனைகள் இருந்ததா? அப்போது மக்கள் வாழவில்லையா? கேரளாவில் எத்தனை கார்பரேட் மருத்துவமனைகள் இருக்கிறது? சிந்தியுங்கள்.இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொரு விரலுக்கும் தனி தனி மருத்துவர்கள் வந்துவிடுவார்கள். இன்று நமது வருமானத்தில் ஒரு பகுதியை ஆங்கில மருந்து கார்பரேட் கம்பெனிகளுக்கு கப்பமாக செலுத்தும் சூழல் உருவாகி விட்டது. முப்பது வருடங்களுக்கு முன்பு எலும்பு தேய்மானம் இல்லாமல் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் ? கால்சியம் பற்றாக்குறை எதனால் உருவாகிறது? அந்த காலகட்டத்தில் பால் என்பது மாடு மூலம் கிடைத்தது. இப்போது சோயா மூலமும் யூரியா மூலமும் தயாரித்து மனித உடலில் உள்ள எலும்புகளை வலுவிழக்க செய்கிறார்கள்.
இப்போது எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் எல் 4 ல் பிரச்சனை எல் 5 ல் பிரச்சனை எனவே ஆப்பரேசன் செய்ய வேண்டும் என்கிறார்கள். உங்களுக்கு எலும்பு தேய்ந்து விட்டது... ஜவ்வு கிழிந்து விட்டது என ஏதேதோ காரணங்களை சொல்லி நம் பணத்தை பிடுங்குவதில் தான் குறிகோளாக இருக்கிறார்கள்.

இதற்க்கு தீர்வு என்ன?

இருக்கிறது...
வாத வள்ளி கிழங்கு... இது இயற்கையின் அற்புத படைப்பு... யாரும் விளைவிக்க முடியாத இயற்கையாக விளைந்தால் மட்டுமே கிடைக்க கூடிய கிழங்கு இது.காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை கற்ப மூலி என்றும் வாத வள்ளி கிழங்கு என்றும் கூறியுள்ளார் இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன 4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் முகநூலில் எனது நட்பு வட்டத்தில் பலர் உண்டு கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உறுவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....
ஆரோகியமான குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேருக்காக முயற்சி செய்யுங்கள் நல்ல சிறப்பான பலன் கிடைக்கும் மேலும் இவற்றில் உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் விந்துவை அடர்த்தியாக மாற்றும் அதனால் தாம்மத்தியம் நீண்ட நேரம் நீடிக்க சாத்தியங்கள் அதிகம் .குழந்தைக்கு ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும். ***********************************************************************
தேவைக்கு அழைக்க 98430 93824 ***********************************************************************
எப்படி சாப்பிடுவது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத வள்ளி கிழங்கு ஒரு கிலோ கிராம் வாங்கி பத்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். , தினமும் நூறு கிராம் அளவிற்கு கிழங்கை நன்கு கழுவி, சுத்தம் செய்து,தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து
சூப்பாக குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்,.
ஒரு மண்டலம் இதனை குடித்து வர எப்பேர்பட்ட எலும்பு மற்றும் வாத நோய்களையும் குணப்படுத்தலாம் என்பது சித்தர்கள் காட்டிய வழி....
இந்த அற்புத வாத வள்ளி கிழங்கு தேவைக்கு அழைக்கவும்....
98430 93824

Monday, 11 June 2018

காய கல்பம்

மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம்

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.

சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.

ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினை
அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,

தூதுவளை 50 கிராம்,

முசுமுசுக்கை 50 கிராம்,

சீரகம் 50 கிராம்

ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.

சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.

சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.

99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.

கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.

உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.

வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.

இதற்கு பத்தியம் எதுவுமில்லை.

இந்த காயகற்ப சூரணம் சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.

காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.

இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

Sunday, 13 May 2018

ஏழு நாட்கள் ஏழு மூலிகை

*🌹தினம் ஒரு மூலிகை🌹*

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

*🍁திங்கள் – அருகம்புல்☘*

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

*🍁செவ்வாய் – சீரகம்☘*

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

*🍁புதன் – செம்பருத்தி☘*

இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

*🍁வியாழன் – கொத்துமல்லி☘*

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

*🍁வெள்ளி – கேரட்☘*

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

*🍁சனி – கரும்பு சாறு☘*

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

*🍁ஞாயிறு – இளநீர்☘*

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.

_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_

*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.