Sunday, 17 July 2016

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற லவங்கப்பட்டை தேநீர்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற லவங்கப்பட்டை தேநீர் !

காலை உணவிற்கு பின்பு இந்த தேநீரை பருகினால், உணவுநன்கு ஜீரணமாகும். சர்க்கரையின் அளவும் குறையும். சோர்வு நீங்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற லவங்கப்பட்டை தேநீர்
(இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்குரியது)

தேவையான பொருட்கள் :

லவங்கப்பட்டை தூள் – 1 தேக்கரண்டி

தண்ணீர் – 500 மி.லி.

செய்முறை :

* தண்ணீரில் லவங்கப்பட்டை தூளை கலந்து சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். அப்போது அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீரில் இறங்கியிருக்கும்.

* வடிகட்டி, ஒருவர் 200 மி.லி. அளவுக்கு பருகலாம். இது சுவையும், மணமும் கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

* காலை உணவிற்கு பின்பு இந்த தேநீரை பருகினால், உணவுநன்கு ஜீரணமாகும். சர்க்கரையின் அளவும் குறையும். சோர்வு நீங்கும்.

* சினைப்பை நீர்க்கட்டியால் துன்பப்படும் பெண்கள் தினம் காலை, மாலை இருவேளை இதை பருகவேண்டும். மாதவிடாய் சீராகும்.

* சர்க்கரை நோய் வரும் சூழ்நிலை இருப்பவர்கள் இதை தினமும் அருந்துவது நல்லது.

* உடல்வலி இருக்கும்போது இந்த தேநீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறும் கலந்துகொள்ளலாம்.

* விருப்பப்பட்டவர்கள் இதில் கருப்பட்டி அல்லது பனைவெல்லம் கருந்து பருகலாம்

Friday, 15 July 2016

சுரம் குணமாக...

சுரம் குணமாக...
"கண்டு பார் பித்த சுரம் பித்தவெட்டை
கலங்காதே அத்திசுரம் காணாமல் ஓடும்
கொண்டு பார் பேய்புடலும் கிராம்பு சுக்கு
கொரையான் கிழங்கு நில வேம்பு மல்லி
தண்டு மிண்டு செய்யாதே சமனாய் கொண்டு
சாதகமா நீர் வார்த்தே எட்டு ஒன்று ஆக்கி
உண்டிடவே சொன்னதொரு சுரங்கள் எல்லாம்
ஓடுமடா வான் எழிலி போலத்தானே..!"
- போகர் வைத்தியம் 700 -
பேய்புடல், கிராம்பு, சுக்கு, கோரைக் கிழங்கு, நில வேம்பு, கொத்து மல்லி ஆகியவற்றை சமனாக சேர்த்து பாத்திரத்தில் இட்டு அளவான நீரை விட்டு எட்டில் ஒன்றாக காய்ச்சி அதை அருந்தினால் பித்த சுரம், பித்த வெட்டை, அதிசுரம் ஆகிய நோய்கள் தீரும்,அத்துடன் சுரங்கள் எல்லாம் தீரும். இதற்க்கு பத்தியம் ஏதும் சொல்லப்படவில்லை அத்துடன் ஒருதடவை அருந்தினால் போதும் என்றே சொல்லப் பட்டுள்ளது.

உறுப்புகளும் நோய்களும்*🌱

🌿 *சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்*🌱
*சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.*
🌳அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, *சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.*

🌵 *உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.*

🐲 *கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்*🐾

☘குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

🐌 *கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்*🦂

🌲குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

🍁குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

🐉 *கிருமிகள் உருவாகக் காரணம்*🐛

🐞கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

🌴அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

🎋நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

👁  *கண் நோய்*:

🍃கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

🍀 *பொதுக் காரணங்கள்* :

🐹வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.
*அவை* : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

🐰 *சிறப்புக் காரணம்* :

👶🏻சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

🌿 *காசநோய்* :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

🌿 *வெள்ளெழுத்து*

🍃கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

🍁முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

🍀கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

😨 *தலைநோய்* :

🍒உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

🍋தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

🍍ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

😨 *கபால நோயின் வகை* :

🕷வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

🍎தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

🍊 *அம்மை நோய்* :

🍏அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

🍇மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

🌽அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

🍒 *இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.*🐉

🎃 அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

🌿 *சித்த மருத்துவம்* கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி
2. பாலம்மை

3. மிளகம்மை
4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை
6. உப்புதரியம்மை

7. கடுகம்மை
8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை
10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை
12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை
14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Thursday, 14 July 2016

கணக்கதிகாரம்

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?
தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

Tuesday, 12 July 2016

தமிழ் அறிவோம்..!

தமிழ் அறிவோம்..!

ண ன ந எங்கெல்லாம் வரும் ?

மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” "ந" என்ன வித்தியாசம்?

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்தவர் 
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்! 
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா? ன்னு...

தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 
மூனுசுழி ண என்பதும் தவறு!

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம்,
ந இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா 
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 
('வர்க்க எழுத்து'-ன்னா, 
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம், தந்நகரம்) 
இந்த ண, ன,ந எழுத்துகளைப் பற்றி அறிந்து கொண்டால் 
எழுத்துப் பிழையும் குறையும்.

எப்புடீ?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து 
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இன்று முழுமையாக தெரிந்து தெளிந்து நீங்களும் தெரிந்து கொள்ளவே இப்பதிவு.

எமக்கு புரிந்தது பகிர்ந்தோம் .!
உங்களுக்கும் புரிந்தால் பகிரலாமே .!
மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டுமே..!!!

பிரச்னைகளுக்கு

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

       *பிரச்னைகளுக்கு நிவாரணி*

           🙏� *ஓம் சிவசிவ ஓம்* 🙏�

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் *“சிவசிவ”* என்று போட்டிருப்பார்கள்.

இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.

அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.

மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான்.

நமசிவாய,
சிவாயநம,
சிவாயசிவ,
சிவசசிவ ,

இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,

தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், . . .

எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.

மந்திர சக்தியும் வேண்டும்,

குடும்பத்திலும் இருக்க வேண்டும்,

அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,
பல சிவனடியார்களை அணுகி, அடிபணிந்து வேண்டிக் கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது.

*அம்மந்திரம் தான் . . . ,*

🙏 *�“ஓம் சிவசிவ ஓம்”* 🙏�

*இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.*

ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும்,

எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.

இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை;

*ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால்,*

*குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது.*

அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.

எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,
வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் *குலதெய்வத்தை* வணங்கிக் கொள்ள வேண்டும்.

அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்.

பிறகு *விநாயகரை* வழிபட வேண்டும்.

பிறகு *தினமும் காலை 108 முறையும்,*

*மாலை 108 முறையும்*,

*ஓம் சிவசிவ ஓம்* என்ற மந்திரத்தை ஜபித்து
கொண்டே வரவேண்டும்.

ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,
நோய்கள் தீர ஆரம்பிக்கும்.

உடனே விட்டுவிடக்கூடாது.

அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

நம்பிக்கைதான் முதலீடு.

*ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.*

21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்.

பவுர்ணமி,
அமாவாசை,
சிவராத்திரி,
தமிழ் மாதப்பிறப்பு,

தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.

எந்த மலையில் இருந்தாலும்,

எந்த கடலில் இருந்தாலும்,

எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.

சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும்.

அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த *ஓம்சிவசிவஓம்* மந்திரத்தை ஜபித்து கொண்டு சென்றால்,

*அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.*

பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி.

மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்,

வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது.

ஆனால், திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால்,

அப்போது மட்டும் இந்த *ஓம்சிவசிவஓம் மந்திரம்* ஜபிக்கலாம்.

பதவி உயர்வு, பதவி வேண்டுவோர் *ஞாயிறு* இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.

                   🙏�

நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் *திங்கள் கிழமை* நோன்புடன் இதை ஜபிக்க வேண்டு.

                   🙏�

தீராத நோய்கள் தீர *செவ்வாய்க்கிழமை*
யன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும்.

                   🙏�

கல்வி, வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய *புதன் கிழமைகளில்* நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.

                   🙏�                 

ஆத்மஞானம் பெற வேண்டின் *வியாழக்கிழமைகளில்* நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.

                   🙏�

பண நெருக்கடி நீங்கவும்,
செல்வ வளம் பெருகவும் *வெள்ளிக்கிழமைகளில்* நோன்பிருந்து இந்த *ஓம் சிவசிவ ஓம்* மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
கண்திருஷ்டி ,

                  🙏�

செய்வினைக் கோளாறு,
மனக்கோளாறு நீங்கிட *சனிக்கிழமைகளில்* நோன்பிருந்து இந்த *ஓம்சிவசிவஓம்*மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.

*சிவபெருமானின்*
*திருவாதிரை* நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது *மாத சிவராத்திரியன்று* அல்லது *மாதப் பிரதோஷம்* அல்லது *சனிப்பிரதோஷம்*அன்று திருவண்ணாமலைக்கு வந்து,

உடலெங்கும் விபூதி பூசி,
கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து, வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு, விரதமிருந்து (சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.

அப்படி கிரிவலம் செல்லும் ,
14 கி.மீ.தூரம் முழுக்க ,
(சுமார் 6 மணி நேரம்) *ஓம் சிவசிவஓம்* என ஜபித்து ஒரு முறை இப்படிச் செய்தாலே,

*நமது ஊழ்வினை தீர்ந்துவிடும்*

நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்,

மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;

*ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,*
*ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.*

     *ஓம் ஈஸ்வரா சரணம்*

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏