Saturday, 13 August 2016

சப்தகன்னியர்கள்

சப்தகன்னியர்கள் பற்றிய மிக அற்புதமான அதிசயமான பதிவு உங்களுக்காக.......

🌹 ஸப்த கன்னியர் 🌹
*******************

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே.......

ப்ராம்மி,மகேஸ்வரி,கவுமாரி,வைஷ்
ணவி,வராஹி,இந்திராணி,சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.

1. 🍓 பிரம்மி 🍓
************

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்க
ு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் தன் மீது அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.
இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும்.(அசைவம் தவிர்க்க வேண்டும்.வீட்டிலும்,வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.)ஐ.ஏ.எஸ்.,வங்க
ிப்பணி,அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

பிராம்மியின் காயத்ரி மந்திரம் :
"ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்."

2. 🍎 மகேஸ்வரி 🍎
*****************

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?
வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.

இவளது காயத்ரி மந்திரம்
"ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்."

3.🍇கெளமாரி🍇
*************

அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி.கவுமாரன் என்றால் குமரன்.குமரன் என்றால் முருகக்கடவுள்.ஈசனும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள்.முருகனின் அம்சமே கெளமாரி.இவளுக்கு சஷ்டி,தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு.
மயில் வாகனத்தில் வருபவள்.அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே.இவளை வழிபட்டால்,குழந
்தைச் செல்வம் உண்டாகும்.(குழந்தைச் செல்வத்திற்கு ஏங்குபவர்கள் கவனிக்கவும்)

கெளமாரியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்."

4. 🍊 வைஷ்ணவி 🍊
*****************

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி.சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி.குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்."

5.🍒இந்திராணி🍒
***************

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி.தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும்,அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதி
லும்,மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால்,அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால்,மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திராணியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத் "

6. 🌹 வராஹி🌹
**************

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும்,ஓய்வுதருவதும் ஆகும்.இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்
.இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின்
அவதாரங்களில் ஒன்றாகும்.இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.இது சிவனின் அம்சமாகும்.அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்,இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.எத
ையும் அடக்க வல்லவள்.சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவ
குணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.

வராஹியின் காயத்ரி மந்திரம்:
"ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் "

7. 🌺 சாமுண்டி 🌺
***************

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள்,தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள்.இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறுகைகள்,பதினாறு விதமான ஆயுதங்கள்,மூன்றுகண்கள்,செந்நிற
ம்,யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள்.சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே!சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள்.
(மாந்திரீகத்தில்)இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது,இவளை அழைத்தால்,புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

சாமுண்டி காயத்ரி மந்திரம்:
"ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத் "

நிறைய அன்பர்கள் குலதெய்வமே தெரியவில்லை என வருத்தப்படுகிறா
ர்கள்.அவர்கள் அனைவரும் மாற்றாக சப்தகன்னியர்களை வணங்கி குலதெய்வ அனுக்கிரகம் பெறலாம்.

இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அருள் புரிந்த சப்தகன்னியரை
உளமாற வணங்குகிறேன்.....

🌻 ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம் 🌻

சர்க்கரை வியாதிக்கான மருந்து:--

சர்க்கரை வியாதிக்கான மருந்து:--
1)வெள்ளைப்பூ ண்டு (உரித்தது)-25 கிராம்,
2) இஞ்சி(புதிய)-50 கிராம்,
3) புதினாகீரை-50கிராம்
4)மாதுளை (புளிப்பு)50கி

இந்த நான்கையும் சேர்த்து விழுதாக சட்டினி போல அரைக்கவும்.
இதை தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேளை ஒவ்வொரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தீராத நாள்பட்ட சர்க்கரை வியாதியின் காரணமாக உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய முற்றிய நிலையில் இருந்தாலும் குணமடையும்.
இதை அனைவருக்கும் பகிரவும்...

Monday, 8 August 2016

அற்புத பானம

உடல் நலம் பெற ஓர் அற்புத பானம்"
உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்யக் கூடிய அற்புத பானம் ஒன்றை நண்பர் மின்னஞ்சலித்திருந்தார்.
செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன...!
பானத்தின் பெயர்: அற்புத பானம் (நாம் வைத்தது)
தேவையான பொருட்கள்: காரட் - 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1.
செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.
உத்தரவதமாகக் கிட்டும் நன்மைகள்:
* புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது
* கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது
* வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது
* நுரையீரலைப் பலப்படுத்துகிறது
* இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது
* நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது
* பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.
* தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது
* உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.
* மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது
* சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது
* அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது
* பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது
* பக்க விளைவுகள் ஏதுமில்லை
* சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது
* எடைக் குறைப்பிற்கு உதவுகிறது
* இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
அருந்தும் விதம்
- காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.
- சாறு பிழிந்த உடனேயே அருந்துவது மிகுந்த நன்மை தரும்
- அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்
- அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்
குறைந்த செலவில் நிறைந்த பலன் களை வாரி வழங்கும் அற்புத பானத்தை நீங்கள் உடனே அருந்தத் துவங்குங்கள் - அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள்

Sunday, 7 August 2016

மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்..!!!

மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்..!!!
காய்ச்சலை குறைக்க கூடியதும், கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை சீர்படுத்த வல்லதும், கர்ப்பபை கோளாறுகளை குணப்படுத்த கூடியதுமான மருத்துவ வகைகளில் ஒன்று கழற்சிக்காய். கழற்சிக்காய் கடினமான ஓட்டை உடையது. கழற்சி கொடியில் கூர்மையான முட்கள் இருக்கும்.
காடுகளில் வளரக் கூடியது. வைரத்தை போன்ற கடுமையான விதையான இது காய்ச்சலை குறைக்க கூடியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வீக்கத்தை குறைக்கும் கழற்சிக் காயானது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்த போக்கை நிறுத்தக்கூடியது. மலேரியா காய்ச்சலை போக்கும்.கழற்சிக்காயை பயன்படுத்தி கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
கால் ஸ்பூன் அளவுக்கு பொடியுடன், சிறிது பெருங்காயம், அரை கப் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில், 48 நாட்கள் குடித்துவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். ஈரல் பலப்படும். வயிற்று புண்கள் ஆறும். வயிற்று வலி குணமாகும். வாயுவை வெளித்தள்ளும். விரைவாதம் குணமாகும். கழுத்து, கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். தைராய்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கழற்சிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 பங்கு அளவுக்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினமும் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய அளவுள்ள பொடியை, 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும். வயிற்று வலி குணமாகும்.
கழற்சிக்காய் குழந்தையின்மைக்கு மருந்தாகிறது. கர்ப்பபை கோளாறுகளை சரிசெய்ய கூடியது. வயிறு, இடுப்பு வலியை போக்க கூடியது. எந்தவகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
யானைக்கால் நோயை குணப்படுத்தும். கால்களில் நரம்புகள் தடித்து இருக்கும் நிலையை போக்கும். உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கும். கழற்சிக்காயை பயன்படுத்தி வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண் ணெய்யுடன் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்து கொள்ளவும். இதை தடவுவதன் மூலம் மூட்டு வீக்கம், தொண்டை வீக்கம், விரைவாதம் சரியாகும். எந்தவொரு வீக்கத்தையும் போக்கும். வயிற்று வலியை குணமாக்கும் தன்மை கொண்டது கழற்சிக்காய். நெறிகட்டை சரிசெய்யும். நெறிக்கட்டால் வரும் காய்ச்சலை போக்கும். கருச்சிதைவு ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கழற்சிக்காயை எடுத்துக் கொள்ள கூடாது. கழற்சிக்காய் இலையை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை களை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். முட்கள் இருக்கும் என்பதால் இலையை பாதுகாப்பாக சுத்தப்படுத்துவது அவசியம். இலைகளை, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். இதை வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்கவும். வீக்கம், வலி குறையும். மூட்டு வலி சரியாகும். கழற்சிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது மலேரியா காய்ச்சல், மனபிரமைக்கு மருந்தாகிறது.

தூக்கமின்மை சரியாக...

கீழாநெல்லி -மஞ்சகாமாலைக்கு
மட்டுமில்ல... மனநலக் கோளாறுக்கும்...! --- நாட்டு வைத்தியம்
# தூக்கமின்மை சரியாக...
சிலபேரு தூக்கமில்லாம தவிச்சிக்கிட்டே இருப்பாங்க. ஜாதிக்காயை பொடி பண்ணி, தினமும் காலையில ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா... சும்மா கும்முனு சொக்கிக்கிட்டுத் தூக்கம் வரும்.
# மனநலக் கோளாறு விலக...
கீழாநெல்லினதும் மஞ்சகாமாலைக்கு மருந்துனுதான் தோணும். ஆனா, மனநலக் கோளாறை சரி பண்ற சக்தியும் அதுக்கு இருக்குங்கறது ஆச்சர்யமான சேதிதான். கீழாநெல்லி சமூலத்தை (இலை, வேர், பூ, காய் என செடி முழுக்க) கல் உரல்ல போட்டு (ஒரு கைப்பிடி அளவு), தண்ணி விட்டு மை மாதிரி அரைக்கணும். தொடக்க நிலை மனநலக் கோளாறு உள்ளவங்களோட தலையில, காலை நேரத்துல இதைப் பூசணும். ரெண்டரை மணியில இருந்து மூணு மணி நேரம் கழிச்சு, தலைக்குக் குளிக்கணும். இப்படி பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை செஞ்சா நல்ல குணம் கிடைக்கும். மொத்தம் ரெண்டு, இல்லனா மூணு தடவை செய்தாலே போதும்.
இதேமாதிரி 'நல்லவேளை இலை'யை கல் உரல்ல போட்டு மையா அரைச்சு தலையில பூசி, ரெண்டரை மணியில இருந்து மூணு மணி நேரம் கழிச்சு தலைக்குக் குளிச்சு வந்தாலும் மனநலக் கோளாறு சரியாகும்.
# நினைவாற்றல் பெருக...
திரிபலாவை (நெல்லிக்காய், தான் றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேன்ல கலந்து தினமும் சாப்பிட்டு வந்தா நினைவாற்றல் பெருகும்.
இதேமாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.
வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் வரும்.
அமுக்கிராங்கிழங்கு சூரணம் ரெண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ஞ்ச திராட்சை ஒரு ஸ்பூன் எடுத்து, 200 மில்லி பசும்பால்ல போட்டுக் காய்ச்சி, ஆறினதும் காலையிலயும் சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் அதிகரிக்கும்.
வல்லாரைத்தூள் 10 மடங்கு, வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வச்சிக்கிடணும். இதுல அரை ஸ்பூன் அளவு தேன்ல கலந்து காலை - மாலைனு சாப்பிட்டு வந்தா... நினைவாற்றல் கூடும்.
இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டா சில நாள் இடைவெளி விட்டுத் தொடரலாம்