Thursday, 30 March 2017

வயிற்றுப்புண்

இந்த கஞ்சி எப்பேர்ப்பட்ட வயிற்றுப்புண்ணையும் ரெண்டே நாட்களில் ஆற்றிவிடும்...

வயிற்றில் புண் அதிகமாக அதிகமாக அது வாய்ப்புண்ணாக நமக்கு வெளிக்காட்டும். அதற்கு என்னதான் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் தீருவதில்லை.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புபுண்ணை பொருத்தவரையில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குணப்படுத்தி வந்தனர். அதுபோல் வீட்டிலுள்ள கசகசா, தேங்காய்ப்பால் போன்ற சில பொருட்களைக் கொண்டே எவ்வளவு தீராத வயிற்றுப் புண்ணையும் ஆற்றிவிட முடியும்.

 தேவையான பொருட்கள் :

கசகசா – 2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் – 1 கப்

பச்சரி குருணை – 150 கிராம்

உப்பு – சுவைக்கு

நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை :

கசகசாவை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து அதை தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரிசி குருணையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கஞ்சியாக காய்ச்சிடுங்கள். அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை அத்துடன் கலந்திடுங்கள்.

கஞ்சியை உப்பு மற்றும் நெய் கலந்து பரிமாறுங்கள்.

இந்த கஞ்சியை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். முதியர்வர்கள் இதை இரவு சாப்பிட்டால் ஆழ்ந்து தூங்கலாம்.

இந்த கஞ்சியை பனங்கற்கண்டு சேர்த்தால் இனிப்பு சுவை கிடைக்கும்.

Wednesday, 29 March 2017

குழந்தையில்லாதவர்களுக்கு

*குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள்.
இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும்.
* குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்
.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது.
சில எளிய பாட்டி வைத்திய முறையும் , பயனுள்ளதாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். சித்தர்களின் மூலிகை மருத்துவத்திலும் இதைப் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கப் பெறுகிறோம்..
1. அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ
்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர குழந்தை பேறு கிடைக்கும்.
2. பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து காலை மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.
3. நீர் முள்ளி விதை 30 கிராம் , பாதாம்பருப்பு 10 கிராம் , கசகசா 10 கிராம் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் காய்ச்சி பாலுடன் சேர்த்துக் குடித்து வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
Call. +91 9994997989
· ஆண்களே உங்கள் மனைவியுடன் திருப்தியாகஇருக
்கமுடியவில்லையா ?
· உடல் உறவு கொள்ள முடியவில்லையா ?
· விந்து விரைவில் வெளியேருகிறதா ?
· விந்து தண்ணீர் போல் உள்ளதா ?
· கை பழகத்தில் ஈடுபட்டு விந்து நஷ்டப்பட்டு விட்டதா ?
· விந்து அணுக்கள் குறைவாக உள்ளதா ?
· கை பழக்கதில் ஈடுபட்டு உடல் மெலிந்து விட்டதா?
· குழந்தை பாக்கியம் இல்லையா ?
· பல மருந்துகள் சாப்பிட்டும் உங்களுக்கு எந்த பலனும்கிடைக்கவி
ல்லையா ?
தினமும் இந்த மூலிகை மருந்தை உட்கொள்வதின்மூலம் :
· விந்து அதிகமாகிறது
· தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
· விந்தணுக்கள் அதிகமாகிறது
· உடல் வசீகரம் ஆகிறது
· ஆண்குறி பெரிதாகிறது
· ஆண்மை அதிகமாகிறது
· நரம்பத்தளர்ச்சி நீங்கும்
· குழந்தை பாக்கியம் பெறலாம்
சித்த மருத்துவ முறைப்படி செய்யப்பட்ட அரிய அற்புத மூலிகை ,48 நாளில் நல்ல பலன் கிடைக்கும், 100% money back guaranty..
பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி,
அனைத்து மருந்துகளும் Courier மூலம் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பபடும்.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் :+91 9994997989.
4. புளிச்ச கீரைகளை,வெங்காயம் சேர்த்து சமைத்து நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
5. இலவங்கப் பட்டை கஷாயம் செய்து அருந்தி வந்தால் தாதுவிருத்தி உண்டாகும்.
6. அரச இலைக் கொழுந்தை அரைத்து சிறிது சூடான பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால் விந்துக் குறை நீங்கி விந்து உற்பத்தியாகும்.
7. செம்பருத்தி பூ உலர்த்திய சூரணத்துடன் முருங்கைப்பூ உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்ப
ிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
8. கானா வாழை சமூலம், தூதுவளைப்பூ, முருங்கைப்பூ ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து 40 நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.
9. முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு, உலர்திராட்சை, பேரீட்சை, தேன், நெல்லி, மா, பலா, செவ்வாழை, கொத்தமல்லி, முளைதானியங்கள், திராட்சை, அன்னாசி, தேங்காய்பால் இவைகளை சாறு எடுத்து சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.
10. அத்திப்பழத்தை உலர்த்திப் பொடி செய்து சூரணமாக பாலில் போட்டு சாப்பிட ஆண் ஆண் மலடு அகலும்.
11. தொட்டால் சிணுங்கி இலையை 15 கிராம் எடுத்து இரவு பாலில் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
12. அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.
13. அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்
கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும்.
14. முருங்கைப் பூ பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.
15. நிலபூசணிக்கிழங்குச் சாறுபிழிந்து, பசும்பால் விட்டு, சர்க்கரை காலை, மாலை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.
16. இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.
17. செம்பருத்திப் பூவைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்துத் இரவில் ஒரு சிட்டிகைத் எடுத்து வாயில்போட்டு பசும்பாலைச் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.
18. அரை கைப்பிடியளவு கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தாது விருத்தி உண்டாகும்.தொடர
்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
19. தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.
20. மாதுளம்பழம் தினமும் இரவு உணவுக்கு பின் சாப்பிட விந்து விருத்தியாகும்.
21. வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர விந்து வலிமை பெறும்.
22. தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வர விந்து விருத்தியாகும்.
* முறைப்படி, யோகாசனங்களை மேற்கொள்ளுவதன் மூலமும் , குறைபாடுகளை சரி செய்ய முடியும் என்பது கண்டறியப்பட்டுள
்ளது.
யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் ( மீன், வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் / நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
செய்ய வேண்டிய யோகாசனங்கள் (முறையாக பயின்ற பின்)
1. சூர்ய நமஸ்காரம்
2. ஹாலாசனம்
3. சிரசானம்
4. பத்த கோனாசனம்
5. கூர்மாசனம்
6. அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்
7. பரியாங்காசனம்
8. பஸ்சிமோத்ஸானம்
9. மூலபந்தாசனம்
10. சர்வாங்காசனம்
11. புஜங்காசனம்
12. தநுராசனம்
13. உபவிஷ்ட கோனாசனம்
14. கந்தாசனம்
15. சவாசனம்.
கூடிய விரைவில் , குறைகள் நீங்கப் பெற்று - மழலை இன்பம் உங்களுக்கு கிடைக்க , இறைவன் அருள் கிடைக்கட்டும்...!

Tuesday, 14 March 2017

12 ராசிக்காரர்களிடம் காணப்படும

12 ராசிக்காரர்களிடம் காணப்படும் முக்கிய செய்கைகள்
---------------------------------------------------------------------------
-------
மேசம்-மூக்கை சுழித்தல்,முகத்தை சுழித்தல், வாயில் எதையாவது போட்டு மென்றுகொண்டிருத
்தல்,மூக்கை செறுமுதல், தோளை அவ்வப்பொழுது உலுக்கிக்கொள்தல்.
ரிசபம்- வாயில் எதையாவது போட்டு மென்றுகொண்டிருத்தல்
மிதுனம்- பிறர் தோள் மீது கைபோட்டுக்கொண்டு பேசுதல் அல்லது பிறர் கைகளை பிடித்துக்கொண்டு பெசுதல், அல்லது பிறரை தொட்டு தொட்டு பேசுதல்
கடகம்- சாப்பிடும் நேரங்களில் உபசரிப்பை நன்றாக வெளிப்படுத்துதல்
சிம்மம்- எதையும் பகிர்ந்து சாப்பிட மாட்டார்கள்.இருக்கமான முகம்
கன்னி- கவர்ச்சி காட்டுவதில் குறியாக இருப்பார்கள்
துலாம்-வாய்ப்பு கிடைத்தால் வியாபாரம் பேசுவார்கள்.
விருச்சிகம்- கோபத்தில் கைகளை சுவற்றிலோ அல்லது பிற பொருள் மீதோ அடிப்பார்கள்
தனுசு- பிறர் தூண்டி விட்டால் உணர்ச்சி வசப்பட்டு பேசுவார்கள்
மகரம்- எதற்கும் சுத்தம் பார்க்க மாட்டார்கள், பெரிய ஆட்களுக்கு பெரும்பாலும் எடுபிடியாக இருப்பார்கள்.
கும்பம்- இருந்த இடத்தில் இருந்து கொண்டு அனைவரையும் வேலை வாங்குவார்கள்
மீனம்- வீட்டில் எதையாவது ஒதுங்க வைத்துக்கொண்டிருப்பார்கள். எதிர்பாலாரை பின் தொடர்வது உண்டு. வானங்களை முந்துவது இவர்களுக்கு பிடிக்கும்.
இந்த விவரம் விஜய் தொலைக்காட்சி நீயா? நானா? நிகழ்ச்சியில் ஜோதிடர்களிடம் கேட்கப்பட்டது. உங்களுக்கு தெரிந்த விவரங்களை இங்கே சொல்லலாம்.

முழங்கால் வலி போக

நம்மிடம் வேலைபார்க்கும் இருவருக்கு முழங்கால் வலி அதிகமாக இருந்தன ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம்  அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது  குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும்  உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

நல்ல பதிவுகளை பகிர்வோம்

Monday, 13 March 2017

பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்

💐📿💉பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்

÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷

தமிழ் இலக்கியத்தில் ஏராளமான மருத்துவ முறைகளும் அறிவுரைகளும் கொட்டிக்கிடக்கின்றன.
மருந்துக் குறிப்புகளோ கணக்கிலடங்காதவை

வியப்பில் ஆழ்த்துபவற்றை இங்கே காண்போம்

மூளை அறுவை சிகிச்சை :-

பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்

தமிழகத்தில் மதுரை அருகே கோவலன் பொட்டலில் கிடைத்துள்ள துளையிடப்பட்ட மண்டையோடு மேலும் ஒரு சான்று.

----------------------------
கட்டி அறுவை சிகிச்சை :-

உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்
(கம்பராமாயணம் -7417)

அதாவது கட்டியை அறுத்து
அதனுள் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி
நெருப்பில் வாட்டி கிருமிகளைக் கொன்று
மருந்து வைத்தல்

இதைத்தான் குலசேகர ஆழ்வார் பாடுகிறார்

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே

அதாவது, வாளால் வெட்டி தீயால் வாட்டினாலும் மருத்துவனை நோயாளி வெறுக்கமாட்டான்
அதுபோல துயர்களைத் தரும் உன்னை நான் வெறுக்கமாட்டேன் என்கிறார்.
--------------------------------
பஞ்சு கட்டு :-

செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”
(புறநானூறு 353)

அதாவது, பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரிந்த வீரர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
------------------------------
தையல் :-

மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்
(பதிற்றுப்பத்து 42:2-5)

இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல,
ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்.
அதாவது தையல் போடும் முறை.
------------------------
ஆயுதங்களால் உண்டான காயங்களிலும்
அறுவை சிகிச்சை நடத்த இடத்திலும்
உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும்,
புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் (பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்).

இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய்தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்று வடிந்த யாக்கையன்
(புறநானூறு 180)
---------------

தீவிர கண்கானிப்பு மனை :-

அதாவது I.C.U போன்றது

தீங்கனி யிரவமொடு மேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.
(புறநானூறு 281)

விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் அறையில் இரவம், வேம்பு ஆகிய இலைகளைச் செருகி,
அறையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி,
நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து,
யாழினால் பல்லிசை இசைத்து,
ஆம்பல் என்னும் குழலை ஊதி,
காஞ்சிப் பண்ணைப் பாடியும் இசையால் மருத்துவம் செய்தனர்.

நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்

நெய்க்கிழி (மருந்தில் முக்கியெடுக்கப்பட்ட துணி) வைத்து கட்டுதல்,
நெய்ப்பந்தர் (மருந்தால் நனைத்து எடுக்கப்பட்ட படுக்கை விரிப்பு) மீது கிடத்தப்படுதல் (முழு உடல் காயம்),
உடலில் புகுந்த எஃகு துண்டுகளை இரும்பு ஆயுதத்தால் கீறி  வெளியே எடுத்தல்.

இதை காந்தம் மூலம் செய்யலாம் என்கிறது கம்பராமாயணம்.

அன்று கேகேயன் மகள் கொண்ட வரமெனும் அயில் வேல்
இன்று கருஎன் இதயத்தின் இடைநின்று என்னைக்
கொன்று நீங்காலது அகன்று இப்பொழுது உன்குலப்புண்
மன்றுலாகமங் காந்தமா மணியின்று வாங்க

கைகேயி கேட்ட வரம் தசரதன் நெஞ்சில் குத்திய வேலாக புதைந்திருந்ததாம்
ராமன் தழுவியதும் காந்தம் இழுத்தது போல அது அகன்றுவிட்டதாம்.
வேறொரு இடத்தில் இதே செயலைச் செய்யும் மருந்து 'சல்லியம் அகற்றுவதொன்று' என குறிப்பிடப்படுகிறது.
இதே போல 'படைக் கலன்கள் கிளர்ப்பதொன்றும்' என்று வேறொரு மருந்தையும் குறிப்பிடுகிறார் கம்பர்.

இது போலவே

முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே
(சீவகசிந்தாமணி)

மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது என்பதை அறிந்த மருத்துவர்,
அம்மருந்தை வாயில் (கவளத்தை வைப்பது போல்) வைப்பர்
பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி,
காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர்.
-----------------------
பெண் மருத்துவர்:-

இவர்கள் மருத்துவி என்று அழைக்கப்பட்டனர்.

ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும் (மணிமேகலை 17, 15)

துறவிகள் இணைந்து நடத்திய 'சக்கர வாளக் கோட்டம்' என்ற மருத்துவமனையைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது.

---------------------------
மகப்பேறு அறுவை சிகிச்சை :-

அதாவது சிசேரியன்,

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்
இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்
துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே

‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர்.
--------------------------
வெட்டுண்ட பாகங்களை ஒட்டுதல் :-
இதுவும் கம்பராமாயணத்தில் 'மெய்வரு வகிர்களாகக் கீண்டாலும் பொருத்துவிப்பதொரு மருந்து' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
----------------------
பிணத்தை அறுத்து ஆராய்தல் :-

செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே.

அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால் (1400களில் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னன்)
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி உறுப்புகளை எடுத்து அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெரிவிக்கிறது
(செகராசசேகரம் எனும் மருத்துவ நூல்)
----------------------
இறந்த உடலை பதப்படுத்துதல் :-

இறந்துபோன தசரதனது உடம்பை,
கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது.
தைலம் ஆட்டு படலம் (பாடல் 608)
-------------------
நன்றி: Orissa Balasubramani
நன்றி: இலக்கியத்தில் மருத்துவம் _யாழ் இணையம்
நன்றி: அறுவை : அன்றும் இன்றும் _tamilnimidangal
நன்றி: விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம் _எம்.கே.முருகானந்தன்.

Wednesday, 1 March 2017

சளியை இரண்டு மணி நேரத்திலேயே வெளியேற்ற

வேகமா பகிருங்கள்: 2 மணி நேரத்தில் நுரையீரல் பாதையில் அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற

தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

தேன் - ஒரு டீஸ்பூன்

தேங்காய் என்னை - ஒரு டேபிள்ஸ்பூன்

ஆப்பிள் சிடர் வினீகர் - ஒரு டேபிள்ஸ்பூன்

இஞ்சி - தேவையான அளவு

செய்முறை | 

சிறிதளவு புதிய இளம் இஞ்சியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். மேல் தோலை சீவிய பிறகு துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.

நறுக்கிய இஞ்சியுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். நல்ல கொதிநிலை அடைந்த பிறகு 15 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு, அதை ஒரு கிளாஸ் டம்ளர் அல்லது பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

எப்போதெல்லாம் சளி தொல்லை அதிகமாக உணர்கிறீர்களோ அப்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிக்கவும்!

இது உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள சளியை இரண்டு மணி நேரத்திலேயே வெளியேற்ற செயல்பட துவங்கிவிடும். நல்ல பலனளிக்கும்.