Monday, 24 October 2016

இதய அடைப்பை குணப்படுத்த

*இதய அடைப்பை குணப்படுத்த இந்த ட்ரிங்கை 4 ஸ்பூன் தினமும் குடிங்க!!*

இன்றைய காலத்தில் 40 வயதுகளில் இதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மது, புகை, மோசமான உணவுப் பழக்கம் என தீயவற்றை தேடிக் கொள்வதன் விளைவு இன்று பல நோய்கள்.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் கொலஸ்ட்ரால்தான். வெறும் உணவு மட்டும் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது. மது புகை, மன அழுத்தம் ஆகியவைகளும் காரணமாகும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அயுர்வேத ட்ரிங்க் தினமும் காலையில் குடித்தால் இதய அடைப்பு நீங்கிவிடும். கொழுப்பு கரையும், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

எலுமிச்சை - 1 கிலோ
சமையல் சோடா - 1 பாக்கெட்
பார்ஸ்லி கீரை - 6 கட்டு,
நீர் - 12 டம்ளர்.

முதலில் எலுமிச்சையை நன்றாக கழுவிக் கொண்டு, இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். மேலே கொடுக்கப்பட்ட அளவில் நீரை வெதுவெதுப்பாக எடுத்துக் கொண்டு அதில் சமையல் சோடாவை மற்றும் எலுமிச்சையை போட்டு 1 மணி நேரம் மூடி அப்படியே ஊற விடவும்.

அதன் பின் பார்ஸ்லி கீரையை பொடியாக நறுக்கி அந்த நீரில் போட்டு 2-3 மணி நேரம் வரை வேக விடுங்கள். அடுப்பை குறைவான தீயிலேயே வைத்து வேக விடவும்.

அதன் பின்னர் ஆற வைத்து வடிகட்டி மூடியுள்ள பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 ஸ்பூன் எடுத்து குடியுங்கள். 20 நாளைக்கு இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பரிசோதனை செய்து பாருங்கள்.

Sunday, 23 October 2016

மரண கண்டம் நீக்கும்

பாவங்களைப் போக்கி , செல்வ வளம் கொழிக்க வைக்கும் அபூர்வ ஆலயங்கள் - சுவாரஸ்யமான தகவல்கள்

நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை "

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!
🗣🗣🗣🗣🗣
கடன், சங்கடங்கள் போக்கும் " திருபுவனம் சரபேஸ்வரர் "

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.
🗣🗣
வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம் "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு

பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர "வாஞ்ஸ்ரீசியய்ம்"

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.
🗣🗣🗣🗣🗣

பிதுர் தோஷம் நீக்கும் " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.
🗣🗣🗣🗣🗣🗣
மரண கண்டம் நீக்கும் " திருநீலக்குடி "
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

மாங்கல்ய தோஷம் நீக்கும் " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

கிரக தோஷங்கள் விலக்கும் " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.
🗣🗣🗣🗣
பெண் பாவம் தீர்க்கும் " திருவிசநல்லூர் "
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.

Thursday, 20 October 2016

யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும் …ஒரு குறிப்பு 🌺*

*🌺யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும் …ஒரு குறிப்பு 🌺*
🌼🌷🌼🌷🌼🌷🌼🌷🌼
மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப் பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.

ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மேலும் அறிக :

திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன் படுத்தி வளம் காணுஙகள்

அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். அடுத்து

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. அடுத்து

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து

மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும்., இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து

உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். அடுத்து

சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து

சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.அடுத்து

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி
ஆகும்

அடுத்து திருவோணம்               நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.அடுத்து

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. அடுத்து

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள்இவரை வீட்டிலேயே சிறு மனி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வநதாக பாவித்து வனங்கலாம்

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானநதர் ஆவார் இவர் ஜீவசமாதி மதுரை மீனாட்சி கோவிலில் உள்ளது

அனைவரும் திதி இல்லாமல் விதி அமையாது.எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

நன்பர்களின் ஆசியுடன்
நல்லவைகள் அனைத்தும் நாடு முழுவதும் பரவட்டும்
ஓம் சிவாய நம
ஓம் மஹேச்வராய நம
ஓம் பரமேஸ்வராய நம
🍁☘🍁☘🍁☘🍁☘🍁

Wednesday, 19 October 2016

தோஷங்கள் நீங்கும் சந்தோஷம் பெருகும்! மஹா சங்கடஹர சதுர்த்தி

*தோஷங்கள் நீங்கும் சந்தோஷம் பெருகும்! மஹா சங்கடஹர சதுர்த்தி !*

விநாயகர், முழுமுதற் கடவுள். அவருக்கு உகந்த விரதம், சங்கட ஹர சதுர்த்தி விரதம். அதிலும் மிக விசேஷமானது மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்.
சந்திரனுக்குக் கிடைத்த சாபம்!

ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது, அங்கு விநாயகர் விளையாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தான். விநாயகர் குதித்துக் குதித்து விளையாடுவதற்கு ஏற்ப, அவருடைய தொந்தியும் குலுங்கிகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், சந்திரனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. விநாயகரைப் பார்த்து கேலியாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு விநாயகருக்குக் கோபத்தை வரவழைத்துவிட்டது. உடனே, ``நீ தேய்ந்து மறையக்கடவாய் என்று சந்திரனைச் சபித்துவிட்டார்.

சந்திரன் மறைந்ததால், உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் விநாயகரைச் சரண் புகுந்தார்கள். தன் தவற்றுக்கு வருந்திய சந்திரனும் தன்னை மன்னிக்குமாறு வேண்டித் தவம் புரிந்தான். மனம் இரங்கிய விநாயகர், சந்திரனைத் தன் தலையில் சூடிக்கொண்டார்.

`பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து, சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அதாவது, 15 நாட்கள் மெல்லத் தேய்ந்து (தேய் பிறை), பின்பு 15 நாட்கள் மெள்ள வளரும்படியான (வளர் பிறை) வரத்தை அருளினார். அப்படி, சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி.
`சங்கட ஹர' என்றால், `சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல் என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

சங்கடஹர சதுர்த்தி மாதம்தோறும் வரும் என்றாலும், விநாயகர் அவதரித்த ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு வரும் (தேய்பிறை) சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என்று கூடுதல் சிறப்பு பெறுகிறது. அன்றைய தினத்தில் விநாயகரை வணங்கி, வழிபடுவோருக்கு, சகலவிதமான சங்கடங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.

நான்காம் பிறையை பார்க்கக் கூடாது ஏன்?

பொதுவாக, `நாலாம் பிறையைப் பார்க்கக் கூடாது என்பார்கள் பெரியவர்கள். நான்காம் நாள் பிறையைப் பார்ப்பவர்களுக்கு `மித்ர தோஷம்' ஏற்படும் என்று வரலாறு கூறுகிறது. ஒருமுறை, பகவான் கிருஷ்ணரே நாலாம் பிறையைப் பார்த்துவிடுகிறார். அதன் விளைவாக அவருக்கும் மித்ர தோஷம் ஏற்படுகிறது.

சத்ராஜித் என்னும் மன்னன் சூரியனை வழிபட்டு, அதன் பலனாக சூரிய பகவானிடமிருந்து சியமந்தக மணியைப் பெற்றான். அவன் அந்த ரத்தினத்தை அணிந்திருந்தபோது, சூரிய பகவானைப்போல் பிரகாசத்துடன் காணப்பட்டான். அந்த நேரத்தில், அங்கு வந்த கிருஷ்ண பகவான், அந்த மணியைக் கையில் எடுத்துப் பார்க்க ஆவல்கொண்டார். ஆனால், சத்ராஜித் அதற்கு மறுத்துவிட்டான்.

பிறகு ஒருமுறை, சத்ராஜித்தின் சகோதரன் ப்ரசேனன், அந்த ரத்தினத்தை (சியமந்தக மணி) அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றான். அப்போது சிங்கம் ஒன்று அவனைத் தாக்கிக் கொன்று, அந்த ரத்தினத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. இதனால், சத்ராஜித் மன்னனும், மற்ற பொதுமக்களும் பகவான் கிருஷ்ணர் மீதே சந்தேகம் கொண்டனர். இதனால், கிருஷ்ணர் அவமானத்துக்குள்ளாக நேர்ந்தது.
இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீநாரதர் கிருஷ்ணரிடம் வந்தார். `நாலாம் பிறையைப் பார்த்ததால் வந்த விளைவே இது என்றார். `சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை தரிசித்தால், இந்தப் பழியில் இருந்து நீங்கலாம்' என்று ஆலோசனையும் கூறினார். அதன்படியே, கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டு, தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க, அந்த ரத்தினத்தைத் தேடி தானே புறப்பட்டார். இறுதியில் கரடிக் கூட்டத்தின் தலைவனான ஜாம்பவானிடம் அந்த ரத்தினம் இருப்பதை அறிந்து,  அவனுடைய குகையை நோக்கிச் சென்றார்.
இந்த ஜாம்பவான் வேறு யாருமல்ல; ராமாவதாரத்தின்போது சீதா பிராட்டியைக் கண்டடைய ஸ்ரீராமருக்கு உதவி செய்தவரே தான்! ஆஞ்சநேய சுவாமிக்கு அவரது பலம் குறித்து நினைவூட்டியவரும் இவரே. இவருக்கு ஸ்ரீராமபிரானைக் கட்டித் தழுவ வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக இருந்தது. ஆனால், தன் உடம்பில் இருக்கும் ரோமங்கள் அவரை புண்ணாக்கிவிடக்கூடும் என்று அஞ்சி, தமது ஆசையை  வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டிருந்தார்.
ராமர் மீது இந்த அளவுக்கு பக்திகொண்டிருந்த ஜாம்பவான், ஸ்ரீகிருஷ்ணர்தான் ராமராகவும் அவதரித்தவர் என்பதை அறியாமல், அவருடன் போர்புரிய ஆயத்தமானார். துவந்த யுத்தமும் தொடங்கியது. இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிடும்போதுதான், தன்னுடன் சண்டை இடுபவர் ஸ்ரீராமர் என்று அறிந்தார் ஜாம்பவான்.

பின்னர், நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கோரி, தனது மகளான ஜாம்பவதியை கிருஷ்ணருக்கு மணமுடித்துவைத்தார். சமந்தகமணி என்கிற ரத்தினத்தையும் அவரிடமே ஒப்படைத்தார். அந்த சமந்தக மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணர் மீது வீண் பழி சுமத்தியதற்காக வருந்திய சத்ராஜித், அவரிடம் மன்னிப்புக் கோரி, தன் மகளான சத்யபாமாவையும் அவருக்கே மணமுடித்துத் தந்தான்.

இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் அனைவரும், தங்களுக்கு ஏற்பட்ட வீண்பழியிலிருந்து நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.   

நாமும், சிராவண மாதத்தில் வரும் இந்தச் சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால், அந்த வருடம் முழுக்க வரும் சங்கட ஹர சதுர்த்திகள் அத்தனைக்கும் சேர்த்து வழிபட்ட பலனை அடையலாம். 

மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி என்பதை அறிவோமா?

விரதம் இருக்கும் முறை:

காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, விநாயகர் சந்நிதிக்குச் சென்று, அவரை வழிபட்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று முழுக்க உபவாசம் இருக்க வேண்டும். மாலையில், விநாயகர் கோயிலுக்குச் சென்று, சங்கட ஹர சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். வீடு திரும்பி, சந்திரன் உதயமானதும், அதைப் பார்த்து வணங்க வேண்டும். பிறகு, நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகரை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம். அன்றைய தினம் முழுக்க விநாயகரைத் துதிப்பது நற்பலன்களைத் தரு.