குழந்தை வளர்ப்பது என்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலான கடமை என்று இன்று நாம் சொல்லலாம். ஏனென்றால் குழந்தைகள் மீது தவறான விசயங்கள் நிறைய திணிக்கக்கூடிய சூழலில் இருக்கிறோம். எனவே அந்தமாதிரியான காலகட்டத்தில் எல்லோருடைய வாழ்வியல் சூழலும் அமைந்துபோனதுதான் வேதனையான விசயம். குழந்தைகளை எப்படி பராமரிப்பது?, எப்படி வளர்ப்பது?, குழந்தைகளுக்கான மருந்துகளை எப்படி தேர்வு செய்வது? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் நாம் பேசலாம்.
அந்தக் காலகட்டத்தில் குழந்தை பிறந்தது என்றால் உரைமருந்து என்று சால்வோம், உரைமருந்து ஊற்றியாச்சா? என்று சொல்லுவோம். இந்த உரைமருந்து என்ன என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், வால்மிளகு, வெள்ளை மிளகு இதனுடன் மூலிகைச்சாறு, கற்பூரவல்லிச்சாறு, வெற்றிலைச்சாறு, துளசிச்சாறு, திருநீற்றுபச்சிலைச்சாறு இவற்றையெல்லாம் சேர்த்து அரைத்து சாக்பீஸ் மாதிரி உருட்டி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள். குழந்தைக்கு உண்டாகக்கூடிய முதல் நோய் மாந்தம் என்று சொல்லுவோம். மாந்தம் என்றால் ஒரு குழந்தை பிறந்தவுடனே அந்த குழந்தைக்கு அமுதமான உணவுப்பொருள் என்னவென்றால், மிகச்சிறந்த அமுதம் என்னவென்றால் தாய்ப்பால். இந்தத் தாய்ப்பாலின் சுவையை ஒரு குழந்தை பாசத்தோடு பருகுவதுதான் அதன் இயல்பு. தன்னுடைய அம்மாவிடம் இருக்கக்கூடிய ஒரு நேரடி உள்ளத்தொடர்பு, உணர்வுத்தொடர்பு எல்லாமே அந்தத் தாய்பாலில் கிடைப்பதால் அக்குழந்தை வகை, தொகை இல்லாமல் முதன்முதலில் அதிகமாகக் குடிக்கக்கூடியத
ு தாய்பால்தான். இந்தத் தாய்ப்பாலே குழந்தைக்கு மாந்தமாக மாறும். குழந்தை பிறந்தவுடனே நோய் தடுப்பூசி (Immunization Injection)போடுவதெல்லாம்கிடையாத
ு. அந்தக் காலத்தில் இந்த உரைமருந்துதான் அவர்களுக்கு மிகச்சிறந்த நோய்தடுப்பு (Immunization). குழந்தை பிறந்த பிறகு தசையை கட்டுவது அதாவது அந்தக் குழந்தைக்கு தினசரி நல்லெண்ணெய் தேய்த்து தலைக்குளிக்கவைத்து, குழகுழ வென்று இருக்கக்கூடிய அந்தக் குழந்தையை நல்ல வலுவாக கொண்டுவருவது. முதல் பதினைந்து நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் வலிமை கொடுக்கக்கூடிய தன்மை எல்லாம் இருந்தது.
இன்று பார்த்தீர்கள் என்றால் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்தது என்றால் 6 மாதத்திற்கு தண்ணீரே ஊற்றாதே என்று பயமுறுத்தக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. தன்னிச்சையாக தன்னுடைய குழந்தையை வளர்த்தது என்ற காலகட்டம் சென்று, இன்று மருத்துவர் என்னசொல்கிறாரோ அதனடிப்படையில் குழந்தையை வளர்ப்பது இல்லையென்றால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற சூழல் இன்றைக்கு நிலவக்கூடியதாக இருக்கிறது. அந்த உரைமருந்து என்று சொன்னோமே அந்த உரைமருந்தை தாய்ப்பாலில் மெதுவாக இளைத்து, அந்தத் தாய்ப்பாலை சங்கில் அரைசங்கு ஊற்றும்பொழுது அந்தக்குழந்தைக்கு முதன்முதலில் உண்டாகக்கூடிய மாந்தம் என்பது சரியாகும்.
மாந்தம்:
ஒரு குழந்தைக்கு முதன்முதலில் வரக்கூடிய மாந்தம் தாய்ப்பாலில் வரும். இந்த மாந்தத்தால் குழந்தைக்கு தொண்டையில் சளி கட்டுவது, சளி அதிகமாவது, மூக்கு அடைத்துக்கொள்வது, மூச்சு விடமுடியாமல் சிரமப்படுவது இப்படியெல்லாம் சில சிக்கல்கள் வரும். குழந்தை மேல் இருக்கும் ஆசை அதிகமாக இருக்கலாம், அதனால்தான் கிராமங்களில் ஒரு குழந்தையை நன்றாக அழவைத்து பாலைக்குடு என்று சொல்லுவார்கள். நன்றாக அழட்டும், நன்றாக கத்தட்டும் அதன் பிறகு பால் கொடுத்தால் செரித்துவிடும் என்பதற்கு காரணம் என்னவென்றால் அப்பொழுதுதான் ஒழுங்கான பசியாக இருக்கும். இல்லையென்றால் பழக்கத்தின் அடிப்படையில் குடுப்பதால் நிறைய மாந்தம் உண்டாவதற்கு வாய்ப்பு உண்டு. சிறு வயதிலேயிருந்து நாம் மூலிகைகளைக் கொடுத்து பழக்கும்பொழுது இந்த மாந்தம் என்ற ஒன்று வராத சூழலை குழந்தைக்கு உருவாக்க முடியும். ஆறு மாதம் ஆனபிறகு குழந்தைக்கு துளசிச்சாற்றை பழக்கப்படுத்துவது மிகவும் நல்லது. ஒரு ஐந்து சொட்டிலிருந்து பத்து சொட்டு துளசிச்சாற்றை ஒரு குழந்தைக்கு ஆறுமாதம் கழித்து, வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் கொடுத்து வரும்பொழுது கைக்குழந்தைகளை மிக எளிமையாக பராமரிக்க முடியும்.
எடுத்ததெற்கெல்லாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, nasal drops போடுவது அதாவது மூக்கில் சில மருந்துகளை போடுவது, குழந்தையை நாம் நிறைய கவனித்துக்கொள்வ
தின்பேரில் கண்டகண்ட மருந்துகள் கொடுப்பது, மருத்துவர் கொடுக்கும் அனைத்து மருந்துகளும் குழந்தைக்கு சரியாகிவிடும் என்று சொல்லமுடியாது. சின்ன சின்ன மருந்துகள் அதாவது துளசிச்சாறு என்பது உணவை அடிப்படையாகக்கொ
ண்டது. அதைக்கொடுக்கலாம்.
அதேபோல் ஆறுமாதம் கழித்த குழந்தைகளுக்கு தூதுவலை சாறு கொடுக்கலாம். எட்டு மாதம், ஒன்பது மாதம் வரும்பொழுது அரிசி சாதம் ஊட்டக்கூடிய அளவிற்கு குழந்தை வளர ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி நேரத்தில் குழந்தைக்கு நொய்யரிசியை நன்றாக குழைய வேகவைத்து கூடவே உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து இதை தாராளமாகத் தரலாம். சில குழந்தைகளுக்கு இந்த அரிசியும் உருளைக்கிழங்கும் கொடுப்பதால் ஜீரணசக்தி இல்லாமல் அப்பொழுதும் மாந்தம் உண்டாகலாம். அந்த மாதிரி மாந்தம் வருகிற பொழுது தூதுவலையை ரசமாக வைத்துக்கொடுக்கலாம். மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், முள் நீக்கிய தூதுவலை இவையனைத்தையும் லேசாக நெய்யில் வதக்கி ஒன்றிரண்டாக பொடித்து இதன் கூடவே தக்காளியையும் சேர்த்து ரசமாக வைத்து இந்த ரசத்தை ஒரு தேக்கரண்டியிலிருந்து இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைக்குக் கொடுக்கலாம். இணை உணவோடு தூதுவலை ரசம் கொடுக்கும்பொழுத
ு உணவினால் பெறப்பட்ட அந்த மாந்தத்தை இந்த ரசம் முழுமையாக நீக்கி அந்தக் குழந்தைக்கு சளி இல்லாமல், இருமல் இல்லாமல் மூச்சில் ஏதும் பிரச்சினை இல்லாமல் நன்றாக வளரக்கூடிய சூழலுக்கு அந்தக் குழந்தையைக் கொண்டு செல்வதற்கு இந்தத் தூதுவலை கண்டிப்பாகக் கைக்கொடுக்கும்.
தூதுவலை நன்றாக நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய அற்புதமான ஒரு மூலிகைப்பொருள். ஒரு பழமொழியே சொல்வார்கள், என்னவென்றால் “தூதுலை மாதுளை இருக்கும் வீட்டில் வாயிலும் மார்பிலும் களங்கமில்லை” என்று சொல்வார்கள். எந்த வீட்டில் தூதுவலை இருக்கிறதோ அந்த வீட்டில் மார்பு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையும் இருக்காது அதாவது நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் இருக்காது என்பது இந்தத் தமிழ் பழமொழியின் அர்த்தம். அதே போல் மாதுளை, மாதுளை இருக்கக்கூடிய வீட்டில் வயிற்றில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று அர்த்தம். ஆக நுரையீரலை வலுப்படுத்தக்கூடிய தன்மை தூதுவலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு தாராளமாக இதனை ஊட்டி பழக்கலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தூதுவலையை உப்பு, மிளகாய், புளி வைத்து துவையலாக அரைத்து அந்தத் துவையலை நாம் கொடுத்து பழக்கும் பொழுது குழந்தைகளுக்கு சளி இருமல் இல்லாமல் பாதுகாக்கமுடியும். நன்றாக அதீத வளர்ச்சியை உருவாக்க முடியும். அந்த வயதிற்கு தகுந்த வளர்ச்சியை உருவாக்கக்கூடிய ஒரு சூழல் உண்டாகும். குழந்தைக்கு மாந்தம் இருக்காது.
இன்றைய குழந்தைகளை மூன்று வயதிலேயே நாம் கெடுத்துவிடுகிற
ோம். எப்படியென்றால் தொலைக்காட்சியைப் பார்த்து அதில் வரக்கூடிய சில உணவுப்பொருட்களை காண்பித்து இதை வாங்கிக்கொடு என்று குழந்தை அடம்பிடிக்கக்கூடிய ஒரு சூழலை நாம் வீட்டிலே கொண்டுவந்துவிடுகிறோம். எனவே அந்த மாதிரி பொருட்களை குழந்தைக்குக் கொடுக்கும்பொழுத
ு பல்வேறு பிரச்சினை வரும். விளம்பரப்படுத்தக்கூடிய சில நூடுல்ஸை குழந்தைகள் சாப்பிடும்பொழுது வயிறு வலி என்பது மிக எளிமையாக வரக்கூடிய ஒரு சூழலாக இருக்கிறது. 3 வயது முடிந்து 4 வயது தொடங்கும் பொழுது எல்.கே.ஜி, யு.கே.ஜி என்று நாம் சேர்க்கப்போகிறோம். அந்த மாதிரி குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வேறு எங்காவது பெற்றோர்கள் வேலைக்கு செல்லக்கூடிய தருணங்களில் அவர்கள் உடனடியாக (Instant)என்ன உணவு செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். அந்த மாதிரி நேரங்களில் நூடுல்ஸ் போன்ற உணவுகளை நிறைய கொடுக்கிறார்கள். இந்த மாதிரி உணவுப்பொருள்களில் நிறைய மெழுகு(Wax) சார்ந்த பொருட்கள் அதிகமாக இருப்பதால், அது குழந்தையின் குடல்பகுதியில் முழுமையாக தங்கி வயிற்றுவலி, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடிய சூழல் உண்டு.
எந்த ஒரு குழந்தைக்கும் கீரையைப் பழக்கப்படுத்தலாம். மூன்று வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தினசரி ஏதாவது ஒரு கீரையை (அரைக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, புளிச்சக்கீரை) ஒருவேளை உணவாகக் கொடுக்கலாம். கீரையை நன்றாக அவித்து சாறாக எடுத்து ரசத்தைக் கூட தண்ணீருக்கு பதில் சேர்த்துக்கொள்ளலாம். அந்த மாதிரி கொடுத்து பழக்கும் பொழுது கீரைகளிலிருந்து பெறக்கூடிய நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து இவையனைத்தும் ஒரு குழந்தையை நல்ல அழகோடும், இளமையோடும், பொலிவோடும் வளர்க்கக்கூடிய ஒரு விசயமாக இருக்கும்.
நல்ல சுவையாக இருக்கிறது, சீக்கிரமாக முடிந்துவிடுகிறது என்பதற்காக செய்யக்கூடிய உணவுகள் குழந்தைகளின் வயிற்றைக் கெடுத்து, மாந்தத்திற்கு உட்படுத்தி அவர்களை நோயாளியாக மாற்றக்கூடிய ஒரு சூழலை உண்டாக்கும். சில நேரங்களில் குழந்தைகளுக்கு வயிற்றுவலி என்று கொண்டுசெல்வோம் நாம் கொடுக்கக்கூடிய உணவு, சில நேரங்களில் food poisonஆகிவிடும். உணவு ஒவ்வாமை அதிகமாகும் பொழுது உடம்பில் மாவுச்சத்து அதிகமாகி அதிகமாகி புளித்துப்போகி நான்கு வயதைத்தாண்டி ஐந்து,ஆறு வயது ஆகும்பொழுது பார்த்தீர்கள் என்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய நிறைய குழந்தைகளுக்கு நாம் தரக்கூடிய உணவுகளாலேயே தொண்டையில் சதை வளர்ந்துவிட்டது என்பதை மிள எளிமையாக கேட்கமுடியும். எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்கக்கூடிய குழந்தைகளுக்குக்கூட tonsils operation இன்றைக்கு மிக சாத்தியமாக நடக்கிறது. மருத்துவர்கள் இந்த tonsils ஆல் பிரச்சினை இல்லை, சதையில் இருக்கக்கூடிய inflammation ஐ கிருமி தொற்றை வெட்டி எடுத்துவிடுகிறோம், அதன் பிறகு tonsil சரியாகிவிடும் அதன்பிறகு ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். ஆனால் மீடியாக்கள் மூலம் நிறைய குளிர்பானங்கள் சாப்பிடுவது பாட்டிலில் அடைக்கப்பட்ட பன்னாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்களை சாப்பிடுவது, ஐஸ்கிரீம் கலாச்சாரம் அதாவது எப்பொழுது பார்த்தாலும் ஐஸ்கிரீமை மிக அதிகமாக மீடியாக்களில் பிரமோட்செய்வதின் அடிப்படையில் குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிடுவது. குளிர்பானங்கள் சாப்பிடக்கூடிய குழந்தைகள், ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடிய குழந்தைகள், நிறைய பேக்கிங் ஃபுட் (கேக், பப்ஸ், சிப்ஸ்) சாக்லேட் ஃப்ளேவர் கலந்த கேக்கை குழந்தைகளுக்கு வாங்கி வாங்கி ஊட்டுவது இவையனைத்துமே நாமே பாசத்தின் அடிப்படையில் குழந்தைகளை கெடுப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.
இந்த உணவுகளை எல்லைமீறி அதிகமாக சாப்பிடும்பொழுத
ு நுரையீரலின் வேலையைக் குறைக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டுசெல்லும். இதெல்லாம் கொடுத்து, அசைவத்தையும் நிறைய கொடுக்கும்பொழுதும் சில நேரங்களில் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு மூச்சு வாங்குவது, மூச்சு எடுக்க முடியாமல் தூக்கித்தூக்கி போடுவது அந்தநேரத்தில் மருத்துவமனையை நோக்கி அம்மாவும் அப்பாவும் அலறிஅடித்துக்கொண்டு ஓடுவது இதெல்லாம் தேவையா? இதெல்லாம் ஏன் வருகிறது என்றால் நம்முடைய மாறுபட்ட உணவு கலாச்சாரத்தினால் வருவதுதான். குழந்தைகளுக்கு ஏற்புடைய மிக எளிதில் செறிக்கக்கூடிய நார்ச்சத்து உணவுகளை நாம் நிறைய கொடுத்துக்கொண்டு வந்தோம் என்றால் குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் மிகவும் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். ஆனால் நாம் அதிலிருந்து நிறைய மாறுகிறோம்.
சில நேரங்களில் இட்லியும், தோசையையும் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதே நாம்தான் என்று சொல்லலாம். தரமான உணவுகளை நிறைய கொடுத்து பழக்கலாம். பழங்கள் கலந்த உணவுகளை நிறைய கொடுத்து பழக்கலாம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி உணவாக Lays, Kurkure போன்றவற்றை தராமல் இருப்பது மிகவும் நல்லது. அதற்குப் பதிலாக பழங்களை நறுக்கி சிற்றுண்டி நேரங்களில் கொடுத்து பழக்கலாம். பள்ளி நிர்வாகமும் அதை ஊக்கிவிக்கலாம். அதுமாதிரி செய்யும் பொழுது வரக்கூடிய இளையதலைமுறைகளை, நல்ல ஆரோக்கியமான தலைமுறையாக நாம் கண்டிப்பாக மாற்ற முடியும். மூலிகைகளைக் கொடுத்து சளி, இருமல் போன்றவற்றை விரட்டுவதற்கான வேலைகளைச் செய்யலாம்.
Tonsilsபற்றிப் பேசிக்கொண்டிருந
்தோம். TonsilOperation அந்த வயதில் தேவையா?, 6 வயதில் 7 வயதில் TonsilOperation செய்தால் கூட மறுபடியும் ஐஸ்கிரீம் சாப்பிடும்பொழுது, கூல்டிரிங்ஸ் சாப்பிடும் பொழுது மறுபடியும் Tonsil வரக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது Primary Complex ஆக மாறலாம். Primary Complex என்றால் சிறுவர்களுக்கு உண்டாகக்கூடிய மூச்சு ஒவ்வாமை நோய். இதனால் நிறைய குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் தன்னுடைய தகுதியை விட்டுக்கொடுக்காமல் மருத்துவர்கள் என்னசொல்கிறார்களோ அதற்கு ஏற்றார்போல் நல்ல வகையாக தலையாட்டக்கூடிய பெற்றோர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். தங்களுடைய தகுதிக்காகவே தன்னுடைய குழந்தைகளை பெரிய பெரிய மருத்துவமனையில் சேர்த்து அங்கு பார்த்து தன்னுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய பெற்றோர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். எனவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக எளிமையானது நான் சொன்னது. துளசி, தூதுவலையைப் பயன்படுத்தலாம். கற்பூரவல்லி என்பது சாதாரணமாக வீட்டிலேயே தொட்டியிலேயே வளர்க்கலாம். கற்பூரவல்லி இலையில் மூன்று இலையை எடுத்து நன்றாக பிழிந்து சாறெடுத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பாருங்கள் எப்பேற்பட்ட சளியாக இருந்தாலும் கண்டிப்பாக முழுமையாக சரியாகிவிடும்.
அதேபோல் சுக்கு, சாதாரணமாக கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்கு, மற்றும்சித்தரத்தை, அதிமதுரம் இம்மூன்றையும் சமஅளவிற்கு 50 கிராம் அளவிற்கு வாங்கி அதை ஒன்றிரண்டாக தட்டிவைத்துக்கொ
ண்டு அதில் சிறிது எடுத்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பனவெல்லம் சேர்த்து அதை வடிகட்டி குழந்தைகளுக்குக் கொடுத்துப்பாருங்கள், பழக்கப்படுத்திப்பாருங்கள் கண்டிப்பாக இருமல், சளி அனைத்துமே முழுமையாக சரியாகிவிடும். இதெல்லாம் நாமதான் செய்ய வேண்டும். முதலில் இதை பிடிக்கவில்லை என்ற சூழல் இருக்கும், இதைக்குடித்தால் சரியாகும் என்று எடுத்துக்கூறும்
பொழுது கண்டிப்பாக கேட்பார்கள். குழந்தைகளுக்கு தெளிவான பேச்சு வரவேண்டும் என்றால் சுத்தமான தேன் கொடுத்து பழக்கவேண்டும். நிறைய குழந்தைகளுக்கு தேன்கூட கொடுப்பது கிடையாது. ஜாம் வேண்டுமென்றால் நாம் குப்பி குப்பியாக வாங்கிக் கொடுப்போம் ஆனால் தேன் தரமாட்டோம். சுத்தமான தேனை வாங்கி நாக்கில் தடவிவிடுவது ஒரு அற்புதமான முறை.
Tonsil யைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம். கரிசிலாங்கன்னி கீரையின் பொடியையும், அதிமதுரத்தையும் சமஅளவு கலந்து வைத்துக்கொண்டு இதை அரை தேக்கரண்டி அளவு தேனில் கலது காலை, இரவு என்று இரண்டு வேளை குழந்தைகளுக்குக் கொடுத்துக்கொண்டே வந்தோம் என்றால் Tonsil முழுமையாக சரியாகிவிடும், முழுமையாக குணமாகும். Primary Complex என்று சொல்லக்கூடிய மூச்சு ஒவ்வாமை நோய்க்கு குழந்தைகளுக்கு தூதுவலை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, அதிமதுரம், சித்தரத்தை இந்தப் பொருட்களை சமஅளவு கலந்து தூள் செய்து வைத்துக்கொண்டு ஒரு மூலிகைக் கூட்டுப்பொடியாக இதை வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் அரைத்தேக்கரண்டி, இரவு அரைதேக்கரண்டி தேனில் கொடுத்துக்கொண்டே வந்தீர்கள் என்றால் கண்டிப்பாக Tonsil சரியாகிவிடும்.
இல்லையென்றால் சித்தமருத்துவக்
கடைகளில் கிடைக்கக்கூடியத
ு திப்பிலி ரசாயனம். திப்பிலி ரசாயனம் என்பது அதே சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், சீரகம், கரஞ்சீரகம், காட்டுச்சீரகம், வெள்ளை மிளவு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, மாசிக்காய் இதெல்லாம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு அற்புதமான லேகியம். நல்ல காரமாக இருக்கும், இந்த லேகியத்தை ஒரு குழந்தைக்கு தொடர்ந்து கொடுத்தீர்கள் என்றால் மூச்சுத்திணறல் (Wheezing) சரியாகும். அம்மா, அப்பாவிற்குத்தான் தன்னுடைய குழந்தை Wheezing வரும்பொழுதுதான் என்னாச்சோ, ஏதாச்சோ என்ற பதறல், பயம் எல்லாமே பெற்றோருக்கு வரத்தான் செய்யும். எனவே வரும் முன் காப்பதற்குத்தான் மூலிகை. வரும்முன் காப்பதற்குத்தான் சித்தமருத்துவம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து வருவதற்கு முன்பே கொடுக்க வேண்டும். எப்பொழுதுமே வளரக்கூடிய குழந்தைக்கு என்னவேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று சொல்லி கண்டதைக்கொடுத்து உடம்பைக் கெடுப்பதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது.
அதே போல் குழந்தைகள் நலமேம்பாடைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கக்கூடிய foodssuppliments ஐ தயவுசெய்து தராதீர்கள். foodssuppliments ஐ நாமே பண்ணலாம். நவதானியங்கள் எள், கொள்ளு, பச்சைப்பயிறு, காராமணி, சுண்டல், வரகு, தினை, குதிரைவாலி, பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூப்ட் இதெல்லாமே சேர்த்து ஒரு நவதானிய சத்து மாவுமாதிரி, சிறுதானிய சத்துமாவு மாதிரி நீங்கள் தயார் செய்து அதை உங்களுடைய குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தலாம். நீங்கள் கவர்ச்சி கரமான புட்டிகளில் வரக்கூடியவற்றை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதில் செயற்கையாக சில இராசாயனபொருட்கள், செயற்கையாக இருக்கக்கூடிய சில வைட்டமின்கள் எல்லாவற்றையும் கலந்து கொடுக்கும் பொழுது ஒவ்வாமை என்பது மிக எளிதாக உருவாகும். அதில் காபி சுவை, வெண்ணிலா சுவை இருக்கிறதால் மற்றும் இன்னும் சில சுவைகள் எல்லாம் சேர்ப்பதனால் குழந்தைகள் லயமாக சாப்பிடும், அப்படியே சாப்பிடுவேன் என்று சாப்பிட்டு அப்படியே வயிறு உபாதை உண்டாகி வயிறு கழிச்சலுக்கு உள்ளான குழந்தைகளின் எண்ணிக்கையை நான் அறிவேன். அந்தமாதிரி எல்லாம் இருக்கக்கூடாது. இந்த மாதிரி நவதானிய சத்துமாவு, சிறுதானிய சத்துமாவு தயார்செய்து அதை குழந்தைகளுக்கு இனிப்பு உருண்டையாக பணவெல்லம் சேர்த்து தொடர்ந்து செய்து கொடுக்கலாம். அந்த மாதிரி செய்து கொடுக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். சூடான பாலில் இந்த மாவை சேர்த்து நன்றாக காய்ச்சி, மறுபடியும் காய்ச்சி கஞ்சி மாதிரி கொடுத்து பழக்கலாம். ஆரோக்கியம் சார்ந்த முறைக்கு நல்ல active ஆன நல்லசத்து தரக்கூடிய ஊட்டமான உணவுகளைக் கொடுக்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும், எந்தத் தடங்கலும் இல்லாமலும் இருக்கும்.
1 - 10 வயது வரைக்கும் ஒரு குழந்தையை வளர்ப்பதற்குத்தான் நாம் சிரமப்படவேண்டும். 10 வயதிற்குப்பிறகு அந்தக் குழந்தைக்கு endocrinology சிறிது சிறிதாக அபிவிருத்தியாக ஆரம்பித்துவிடும். அதாவது ஒரு குழந்தை மழலைக்குரலில் கீச்சுக்குரலில் அம்மா,அப்பா என்று ஒரு பெண் பேசுவது போல பேசிய ஒரு பையன் திடீரென்று குரல் உடையக்கூடிய சூழல் 10 வயதிற்குப்பிறகு. பார்த்தோம் என்றால் அந்த மழலைக்குரல் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து முகத்தில் லேசாக மீசை அரும்புவது இந்த மாதிரி முடியெல்லாம் வளர ஆரம்பிக்கும் பொழுது நாளமில்லா சுரப்பு மண்டலம் தூண்டப்படுகிறது. அந்த மாதிரி நாளமில்லா சுரப்பி தூண்டும்பொழுது அவனுக்கென்று தனியாக ஒரு ஆளுமை வரும் வரைக்கும் ஒரு குழந்தையை குழந்தையாக வளர்ப்பது, குழந்தைக்கான ஆரோக்கியத்திற்க
ு நல்ல உணவுகளையும், நல்ல மூலிகைகளையும் மருந்தாக மாற்றிக்கொடுப்பது எல்லாமே பெற்றோர்கள் செய்யக்கூடிய கடமை. கண்ட கண்ட மருந்துகளைக் கொடுப்பது, அடிக்கடி குழந்தைக்கு காய்ச்சல் வருகிறது என்பதற்காக நிறைய ஊசிகள் போடுவது இதெல்லாம் தேவையில்லாத ஒரு செயல். எப்பொழுதுமே ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வருவது, தலைவலி வருவது, வாந்தி-பேதியாவது இயல்பாக வரக்கூடிய ஒன்று. இது எல்லாமே வருகிறது என்றால் அந்தக் குழந்தைக்கு ஏதோ ஒரு ஒவ்வாமை இருக்கிறது என்றுதான் அர்த்தம். அந்த ஒவ்வாமை என்பது உணவு ரீதியாகத்தான் வருகிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் முழுமையாக தெளிவாக உணர்ந்துகொண்டு அவர்களுக்குத் தரவேண்டிய உணவுகளை முறையாக பட்டியலிடவேண்டும்.
ஒரு குழந்தைக்குத் தரக்கூடிய உணவில் கண்டிப்பாக கீரை அவசியம் இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய உணவில் உலர்பருப்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்குத் தரக்கூடிய உணவுகளில் கோதுமை சார்ந்த உணவுகள் நிறைய வரவேண்டும், சிறுதானியம் சார்ந்த உணவுகள் நிறைய வரவேண்டும். இட்லி ஓரளவிற்கு வரலாம். இடியாப்பம் வரலாம், அதீதமாக தரக்கூடிய தோசையின் அளவை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. மிக எளிமையாக வேலை முடியவேண்டும் என்பதற்காக வாரத்திற்கு ஒரு நாள் தோசைக்கு மாவை ஆட்டி அதை ஒரு வாரம் பயன்படுத்தக்கூடிய தாய்க்குலங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உண்டு. எப்பவுமே காலை என்றாலே இரண்டு தோசை. இரண்டு கரண்டி மாவை லேசாக எண்ணெய் போட்டு தடவிக் கொடுத்தால் அதற்குப் பெயர் தோசை என்று கொடுத்தோம் என்றால் கண்டிப்பாக அதில் சத்து வராது.
பள்ளிக்குக் கொடுக்கக்கூடிய சிற்றுண்டிகள், புளித்த மாவில் செய்த தோசை, மதியம் கொண்டு சென்ற தயிர்சாதம் எல்லாமே சேர்ந்து கபத்தை அதிகப்படுத்தும். கபம் அதிகமாகும் பொழுது கண்டிப்பாக குழந்தைகள் தடுமாறுவார்கள், திணறுவார்கள், செறிவு (concentration)
மாறும், எனவே நிறைய சிக்கல்கள் வரக்கூடிய ஒரு சூழல் உண்டு. ஆக நான் சொன்ன உணவுப் பொருட்களையும், மருந்துப்பொருட்
களையும் பெற்றோர்கள் பழக்கப்படுத்துங்கள். பத்து வயது வரையும் அவர்கள் குழந்தைகள் தான். அந்த மழலை அமுதத்தை ஒழுங்காக முறையாக பாவித்து ஆரோக்கியமான ஒரு வாழக்கைக்கு அடித்தளம் செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் பருவத்துக்கு போகும் பொழுது நல்ல தெளிவான மனநிலையோடு ஆரோக்கியமான சூழலோடு அவர்களுக்கான எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய சூழல் கண்டிப்பாக உண்டாகும். எனவே குழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர்கள் நினைத்தால் கண்டிப்பாக சாத்தியமாகும். நிறைய மருந்துகள் சொல்லியிருக்கிறேன், தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
நன்றி
மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667
Wednesday, 5 July 2017
குழந்தை வளர்ப்பது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment