Saturday, 8 July 2017

நோய் தீர்க்கும் ஹோம முறை

அகத்தியர்,யாகம்நோய் தீர்க்கும் ஹோம முறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். எந்த மாதிரியான நோய்களுக்கு இந்த ஹோமம் பயன் தரும் என்கிற தகவல் பாடலில்இல்லை. எனினும் பொதுவான தேக ஆரோக்கியம் வேண்டுவோர் செய்து பயனடைந்திடலாம் என கருதுகிறேன். இந்த ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்."பாரப்பா யின்னுமொரு சூட்சுமந்தான்பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளுபேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்துநலமான அக்கினியை லரசால்செய்துபூணவே புவனையுட மந்திரந்தன்னால்புத்தியுடன் பலாசுகொண் டோமாமம்பண்ணுவீரப்பாயு ன்னைபிடித்த நோய்களோடுவெகுநூறு பிணிகளெல்லாம் விலகுந்தானே"- அகத்தியர் -அறு கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்க்க வேண்டும். வழமை போல அக்கினியின் மூல மந்திரமான“
ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா”
என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.
நன்குவளர்ந்த தீயில் புவனையின் மூல மந்திரமான“
ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா”
என்ற மந்திரத்தைசொல்லிக் கொண்டே பலாசு மரத்தின் குச்சிகளை போட வேண்டும் என்கிறார். இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உள்ளது. இப்படி ஆயிரத்தி எட்டுத் தடவைகள் மந்திரம் சொல்லி பலாசுக் குச்சிகளைப் போடவேண்டும் என்கிறார்.இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை செய்தவரை பீடித்திருக்கும் நோய் விலகுவதுடன் எதிர்காலத்தில் பல வகையான நோய்களும் அண்டாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம்.

No comments:

Post a Comment