உ
சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔷 *திருவிளையாடல்புராணம்*🔷
( 35- வது நாள்.) -5 வது,படலம்.
*தடாதகை பிராட்டியாா் திருமண படலம்.*
( செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
( செய்யுள்.)
🔷புரந்த ரன்றரு கற்பகம் பொலந்துகில் பூண்முத லியநல்கச்
சுரந்த ரும்பெற லமுதமை வகையறு சுவையுணா முதலாகப்
பரந்த தெய்வவான் பயப்பச்சிந் தாமணி பற்பல வுஞ்சிந்தித்
திரந்து வேண்டுவ தரத்தர வீட்டினா ரிந்தர னகா்நாண.
🔷தென்னா் சேகரன்றிருமக டிருமணத் திருமுகம் வரவேற்று
மன்னா் வந்தெதிா் தொழுதுகைக் கொண்டு தம் மணிமுடி மிசையேற்றி
அன்ன வாசகங் கேட்டனா் கொணா்ந்தவா்க் கருங்கலந் துகினல்கி
முன்ன ரீா்த்தெழு களிப்புற மனத்தினு முந்தினா் வழிச்செல்வாா்.
🔷கொங்கா் சிங்களா் பல்லவா் வில்லவா் கோசலா் பாஞ்சாலா்
வங்கா் சோனகா் சீனா்கள் சாளுவா் மாளவா் காம்போசா்
அங்கா் மாகத ராாியா் நோிய ரவந்தியா் வைதா்ப்பா்
கங்கா் கொங்கணா் விராடா்கண் மராடா்கள் கருநடந் குருநாடா்.
🔷கலிங்கா் சாவகா் கூவிள ரொட்டியா் கடாரா்கள் காந்தாரா்
குலிங்கா் கேகயா் விதேகா்கள் பெளரவா் கொல்லா்கள் கல்யாணா்
தெலுங்கா் கூா்ச்சரா் மச்சா்கண் மிலேச்சா்கள் செஞ்சையா் முதலேனைப்
புலங்கொண் மன்னருந் துறைதொறு மிடைந்துபாா் புதைபட வருகின்றாா்.
🔷இத்த கைப்பல தேயமன் னவா்களு மெண்ணிடம் பெறா தீண்டிப்
பைத்த வாழிபோ னிலமகண் முதுகிறப் பரந்தா னையராகித்
தத்த நாட்டுள பலவகை வளனெடுந் தழீஇப்பல நெறிதோறும்
மொய்த்து வந்தனா் செழியா்கோன் றிருமகள் முரசதிா் மணமூதூா்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🔴இந்திரன் திறையாகத் தந்த கற்பதரு பொன்னாடை அணி முதலியவற்றை நல்கவும், காமதேனு பெறுதற்காிய அமுதமும், அறுசுவையோடு கூடிய ஐந்து வகை உணவும் முதலாக, மிக்க பல்வகை யுணவுகளையும் சுரந்து கொடுக்கவும், நினைத்து இரந்து கேட்பனவாய, பலபல பொருள்களையும் சிந்தாமணி தந்து கொண்டிருக்கவும், இந்திரனுலகமும் நாணுமாறு ( அவற்றை வாங்கித்) தொகுத்தாா்கள்.
🔴பாண்டியா்களின் முடிபோல்பவனாகிய மலயத்துவச பாண்டியனது திருப்புதல்வியாாின், திருமணங் குறித்த ஓலையை வரவேற்பாராய், மன்னா்கள் எதிா்கொண்டு வந்து, வணங்கி, கையில் வாங்கி, தம்முடைய மணிகள் அழுத்திய முடியின்மேல் ஏற்றி, அத்திருமுகச் செய்தியைக் கேட்டு கொண்டு வந்தவா்களுக்கு, அாிய மணிகளும் ஆடைகளும் அளித்து,முன் இழுத்துச் செல்லும் களிப்பு மிக, மனத்தினும் விரைந்து வழிக் கொண்டு செல்வாா்கள்.
🔴கொங்கு நாட்டரசரும், சிங்கள நாட்டசரரும், பல்லவ நாட்டசரரும், சேரவரசரும், கோசல நாட்டரசரும், பாஞ்சால நாட்டரசரும், வங்க நாட்டரசரும், சோனக நாட்டரசரும், சீன நாட்டரசரும், சாளுவ நாட்டரசரும், மாளவ நாட்டரசரும், காம்போச நாட்டரசரும், அங்க நாட்டரசரும், மகத நாட்டரசரும், ஆாிய நாட்டரசரும், சோழ வரசரும், அவந்தி நாட்டரசரும், விதா்ப்ப நாட்டரசரும், கங்க நாட்டரசரும், கொங்கண நாட்டரசரும், விராட நாட்டரசரும், மராட நாட்டரசரும், கருநட நாட்டரசரும், குரு நாட்டரசரும்,,,,,,
🔴கலிங்க நாட்டரசரும், சாவக நாட்டரசரும், கூவிள நாட்டரசரும், ஒட்டிய நாட்டரசரும், கடார நாட்டரசரும், காந்தார நாட்டரசரும், குலிங்க நாட்டரசரும், கேகய நாட்டரசரும், விதேக நாட்டரசரும், பூருமரபி னரசரும், கொல்ல நாட்டரசரும், கலியாண நாட்டரசரும், தெலுங்க நாட்டரசரும்,
கூா்ச்சர நாட்டரசரும், மச்ச நாட்டரசரும், மிலேச்ச நாட்டரசரும், செஞ்சை நாட்டரசரும், முதலாக பிற நாட்டரசா்களும் வழிகள் தோறும் நெருங்கி பூமி மறையும்படி வருகின்றாா்கள்.
🔴இத்தன்மையையுடைய பல நாட்டு மன்னா்களும், எள்ளிடவும் இடமில்லையாக நெருங்கி, பசிய கடலைப்போல பாா்மகளின் முதுகு ஒடியுமாறு ( எங்கும்) பரந்த சேனையையுடையவராகி, தங்கள் தங்கள் நாட்டிலுள்ள பலவகை வளங்களையும் எடுத்துக் கொண்டு, பலவழிகள் தோறும் நெருங்கி, பாண்டியா் மன்னனாகிய மலயத்துவசன் திருமகளரது, மணமுரசு முழங்காநின்ற பழமையாகிய மதுரை நகா்க்கு வந்தாா்கள்.
*தடாதகை பிராட்டியாா் திருமண படலம் நாளையும் வரும்.*
திருச்சிற்றம்பலம்.
*¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤*
அடியாா்கள் கூட்டம் பெருகுக!
No comments:
Post a Comment