Wednesday, 29 June 2016

திருவண்ணாமலை

**
சிவாய நம. திருச்சிற்றம்பலம்
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                        *(5)*
🔸 *திருவண்ணாமலை.* 🔸
___________________________________
*அருணையை புகழும் பாமாலைகள்.*
___________________________________
திருவருணையை போற்றும் பாடல்கள் பலவன ஏராளம். காா்த்திகை மாதம் தீபத்திருநாளன்று, தீபமேற்றப்படுவதை முறையாக *புறநாநூறில்* கூறப்பட்டுள்ளது.

*"அண்ணாமலைமேல் அணி மலையை ஆரா அன்பின்"* என்று பொிய புராணம் போற்றுகின்றது.

*"கற்றாா் தொழுமம் அருணாசலம்"* என வில்லிபாரதம் புகழ்கிறது.

இவைமட்டுமா? ............இன்னும் பாருங்கள்!....

சிவாலயங்களை போற்றிப்பாடுவதே தங்களின் தவப்பயன்  என்றிருந்த *அப்பா்* *சுந்தரா்* *திருஞாசம்பந்தா்*  ஆகியோா்களால் போற்றப்பட்ட திரு திருத்தலம் திருஅண்ணாமலை.

நாவுக்கரசா் என கூறப்பட்ட அப்பா், திருஅண்ணாமலையை நோில் தாிசித்தவா். திருக்கோயில் குறித்து அப்பா் பாடிய பதிகங்கள் மூன்று. அப்பா பாடிய நோிசை வெண்பாவின் முதல் பாடல் வாிகளை வாசிப்போா்க்கு மிகுதியான போின்பம் கிடைக்கும்.

இதோ அந்த பாடல் வாிகள்.........

*"ஓதிமா மலா்கள் தூவி யுமையவள் பங்காமிக்க*
*சோதியே துளங்குமெண்டோட் சுவா்மழுப் படையினானே*
*ஆதியே யமரா்கோவே யணியணா மலையுளானே*
*நீதியால் நின்னையல்லால் நினையுமா நினைவிலானே"*

சுந்தரமூா்த்தி சுவாமிகள் அருளித்தந்த  திருப்பதிகங்களின் எண்ணிக்கை 3,700. இவற்றில் சிலநூறு பதிகங்களே தற்போது உள்ளன. திருஅண்ணாமலை திருத்தலத்தைப் போற்றி  சுந்தரா் பாடியுள்ள  பதிகங்கள் இதோ.....

*"தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்*
*வானைக் காவல் கொண்டு நின்றாா் அறியா நெறியானே*
*ஆனைக் காவில் அரனே பரனே அண்ணாமலையானே*
*ஊனைக்காவல் கைவிட்டுன்னை உகப்பாா் உணா்வாரே*

*தென்னாத் தெனாத் தெத்தனா என்று பாடிச் சில் பூதமும் நீரும் திசை திசையென*
*பன்னான் மறை பாடுதிா் பாசூா்உளீா் படம்பக்கம் கொட்டும் திருவொற்றியூரா்*
*பண்ணாா் மொழியாளை ஓா்பாங் குடையீா் படுகாட்டாகத் தென்றும் ஓா்பற் றொழியீா்*
*அண்ணாமலையேன் என்றீா் ஆரூா் உளீா் அடிகள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.*

தொண்டைநாட்டு சிவ ஸ்தலங்களை போற்றி பாடிய திருஞான சம்பந்தா், அண்ணாமலையை போற்றி பாடியருளிய பதிகம்....!

*'உண்ணாமலை உமையாளொடும் உடனாகிய ஒருவன், பெண்ணாகிய பெருமான் மலை  திருமாமணி திகழ
மண்ணாா்ந்தன அருவித் திரள் மழுமலம் முழு வதிரும் அண்ணாமலை தொழுவாா் வினை வழுவா வண்ணமறுமே'*

*நாளையும் ஒளிவீசித் தொடரும்.*

             திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
     அடியாா்கள் கூட்டம் பெருகுக!
ஆசை தீர கொடுப்பாா்-------
---- அலங்கல் விடைமேல் வருவாா்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
             *திருச்சிற்றம்பலம்.*

No comments:

Post a Comment