1954ம் ஆண்டு முதல் 2004 வரை .. அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கியவாதிகள்
1954 - தமிழ் இன்பம் (கட்டுரைகள்) - ரா.பி.சேதுப்பிள்ளை. 1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி. 1958 - சக்கரவர்த்தி திருமகன் - ராஜாஜி. 1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வ (.வரதராஜன்). 1962 - அக்கரை சீமையில் (பயணக் கட்டுரை) - சோ என்ற மீ.பா.சோமசுந்தரம். 1963 - வேங்கையின் மைந்தன் (நாவல்) - அகிலன். 1965 - ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி.ஸ் ஆச்சார்யா. 1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம.பொ.சிவஞானம். 1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி.வா.ஜகன்னாதன். 1968 - வெள்ளைப் பறவை (நாடகம்) - ஏ. ஸ்ரீனிவாச ராகவன். 1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன். 1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - ஜி.அழகிரிசாமி. 1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி. 1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன். 1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன். 1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே.டி.திருநாவுக்கரசு. 1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர்.தண்டாயுதம். 1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி. 1978 - புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன். 1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைகள்) - தி.ஜானகிராமன். 1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன். 1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - எம்.ராமலிங்கம். 1982 - மணிக்கொடிகாலம் (இலக்கிய வரலாறு) - பி.எஸ்.ராமய்யா. 1983 - பாரதி - காலமும் கருத்தும் (விமர்சனம்) - டி.எம்.சி. ரகுநாதன். 1984 - ஒரு காவேரியைப் போல (நாவல்) - லட்சுமி. 1985 - கம்பன்: புதிய பார்வை - அ.ச.ஞானசம்பந்தன். 1986 - இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (விமர்சனம்) - க.நா.சு. 1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைகள்) - ஆதவன் சுந்தரம். 1988 - வாழும் வள்ளுவம் (விமர்சனம்) - வா.சே. குழந்தைசாமி. 1989 - சிந்தாநதி - லா.ச.ராமாமிர்தம். 1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு.சமுத்திரம். 1991 - கோபல்லபுரத்து மக்கள் (நாவல்) - கி.ராஜநாராயணன். 1992 -குற்றாலக்குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன். 1993 - காதுகள் (நாவல்) - எம்.வி.வெங்கட்ராம். 1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன். 1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன். 1996 - அப்பாவின் ஸ்னேகிதர் (சிறுகதைகள்) - அசோகமித்திரன். 1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகம்மது மீரான். 1998 - விசாரணை கமிஷன் (நாவல்) - சா.கந்தசாமி. 1999 - ஆலாபனை (கவிதை) - அப்துல் ரகுமான். 2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் - தி.க.சிவசங்கரன். 2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி.சு.செல்லப்பா. 2002 - ஒரு கிராமத்து நாடி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம். 2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து. 2004 - வணக்கம் வள்ளுவா (கவிதை) - ஈரோடு தமிழன்பன்.
No comments:
Post a Comment