Thursday, 11 July 2013

நோம்புக்கஞ்சி .....

நோம்புக்கஞ்சி .....

தேவையான பொருள்கள்..

1. பச்சரிசி (சீரக சம்பா)- 100 கிராம் (அரைப்பதமாக அரைத்தது)
2. வெங்காயம் - 1
3. சின்ன‌ வெங்காயம்- 5
4. தக்காளி- 1
5. பச்சை மிளகாய்- 2
6. கொத்தமல்லி- ஒரு கொத்து
7. புதிணா- ஒரு கொத்து
8. பாசிப்பருப்பு- 1 தேக்கரண்டி
9. வெந்தயம்- 1 தேக்கரண்டி
10. மட்டன்(நசுக்கியது)- 50 கிராம் (தேவைப்பட்டால்)
11. இஞ்சி பூண்டு- 1 தேக்கரண்டி
12. பட்டை- 2
13. கிராம்பு- 2

செய்முறை..

ஒரு குக்கரில் சிறிதளவு எண்ணையை ஊற்றி அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து பட்டை, கிராம்பினை வெடிக்க விடவும், அதனுடன் வெந்தயத்தை சேர்த்து சிறிதுநேரம் வதக்கியவுடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு 2 நிமிடம் வதக்கினால் போதும், அதனுடன் ஆறு(6) டம்ளர் தண்ணீர் சேர்த்து அதனுடன் பச்சரிசி, மட்டன், கொத்தமல்லி, புதிணா, பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை 6 விசில் விடவும். விசில் முடிந்ததும் ஐந்து நிமிடம் கழித்து பரிமாறினால் சுவையான நோம்புக்கஞ்சி தயார்...

பின் குறிப்பு:- அரிசிக்கு பதிலாக ஓட்ஸ் சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் மற்றும் தக்காளியினை அதிகம் எண்ணையில் வதக்கவேண்டாம் அதிக நேரம் வதக்கினால் நிறம் மாறக்கூடும்..!

No comments:

Post a Comment