Saturday, 2 July 2016

திப்பிலி கற்பம்

திப்பிலி கற்பம்
திப்பிலியை தூசு நீக்கி எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து உலர்த்தி போன்மேனியாக வறுத்து பிறகு இடித்து சூரணம் செய்து போதிய அளவு தேன் விட்டு கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை இருவேளையும் 5 முதல் 10 குன்றி எடை 48 நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் தொண்டைகம்மல், நாட்பட்ட இருமல், வீக்கம், சயித்தியம், அக்கினி மந்தம், தாதுநட்டம் முதலியவைகளை கண்டித்து இரைப்பைக்கும், ஈரலுக்கும் பலத்தை கொடுக்கும்.
இந்த சூரணத்துடன் வெற்றிலை சாறும், தேனும் கூட்டி பெரியவர்களுக்கு கொடுக்க சயித்தியம், கபம் சம்பந்தமான சுரம் தேமல் முதலியவை குணமாகும்.
இச்சூரணத்தை குழந்தைகளுக்கு ஒன்று முதல் ஒன்றரை குன்றிஎடை, சரீர வன்மைக்கு ஏற்ப தேனில் குழைத்து கொடுக்க வயிற்றிலுள்ள புளிப்பைக் கண்டிக்கும்.

No comments:

Post a Comment