Thursday, 7 July 2016

சிவ மூலமந்திர இயல்*

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

      🙏� *சிவ மூலமந்திர இயல்* 🙏�

1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?

*ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).*

2. ஸ்ரீ பஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

*மது பானமும்,*
*மாமிச போசனமும் இல்லாதவராய்,*
*ஆசாரம் உடையவராய்,*
*சிவ தீக்ஷ பெற்றவராய் உள்ளவர்.*

3. ஸ்ரீ பஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்?

*நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.*

4. எந்த திக்கு முகமாக இருந்து செபித்தல் வேண்டும்?

*கிழக்கு முகமாக வேனும், வடக்கு முகமாக, இருந்து செபித்தல் வேண்டும்.*

5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

*முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலபுறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.*

6. எப்படி இருந்து செபிக்கல் ஆகாது?

*சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக்கொண்டுஞ் செபிக்கல் ஆகாது.*

7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?

*சிவபெருமான் இடத்திலே அழுந்திக் கிடத்தல் வேண்டும்.*

8. நிற்கும் பொழுதும்,
நடக்கும்பொழுதும்,
இருக்கும் பொழுதும்,
கிடக்கும் பொழுதும்,
மற்றை எத்தொழிலைச் செய்யும் பொழுதும் மனசை எதிலே பதித்தல் வேண்டும்?

*உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேயே மனசைப் பதித்தல் வேண்டும்.*

9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?

*வேறு ஒன்றிலும் பற்று வையாது, சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டும் மரித்தல் வேண்டும்.*

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment