Saturday, 2 July 2016

கார லவண பற்பம்

கார லவண பற்பம்
படிகாரம் - 1 பலம்
வெடியுப்பு - 1 பலம்
வெங்காரம் - 1 பலம்
படிகாரத்தை பொடித்து ஒரு அகன்ற மண் பானையில் பரப்பி அதன் மீது வெடியுப்பை பொடித்து போட்டு, முடிவில் வெங்காரத்தை பொடித்து போட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரிக்கவும். சிறிது நேரத்தில் எல்லாம் உருகும், தொடர்ந்து எரிக்க நீர் சுண்டி பூத்துவிடும். பிறகு கீழிறக்கி ஆறவிட்டு கல்வத்தில் நன்றாக அரைத்து புட்டியில் அடைக்கவும்.
அளவு : 1/2 கிராம் முதல் 2 கிராம் வரை (உடல் வன்மை பொருத்து)
அனுபானம் : இளநீர், முள்ளங்கி சாறு
வேளை : காலை இரவு
தீரும் நோய்கள் : இது உடம்பிலுள்ள நீர் கோவையை சிறுநீர் மூலமாக வெளிபடுத்துவதில் சிறந்தது. நீர்சுருக்கு, நீர்கட்டு, வெள்ளை, வெட்டை, கல்லடைப்பு மற்றும் அனேக நோய்கள் தீரும்.
இது ஒரு அற்புதமான மருந்து.

No comments:

Post a Comment