Saturday, 2 July 2016

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி
இன்று பெரும்பாலும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று இந்த வயிற்றில் பூச்சி. குறிப்பாக குழந்தைகள் இந்த பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இதை எப்படி தீர்ப்பது என்று ஒருவித பயத்தோடு வருகிறார்கள். இந்த வயிற்றில் பூச்சி பிரச்சனைக்கு ஆளாகாத குழந்தைகளே இல்லை எனலாம். இது ஒன்றும் தீர்க்க முடியாத பிரச்சனையோ நோயோ இல்லை. எளிதில் சரி செய்யக் கூடியதே. எல்லாம் நம்ம தாத்தா பாட்டி என்ன செய்தார்கலோ அதை தான் சொல்லப் போறேன்.
சில குழந்தைகளுக்கு கையில் கொப்புளங்கள் போலவும் வரும். அதற்கும் வயிற்றில் பூச்சிகள் தான் காரணம். சில முறைகளை சொல்கிறேன் அதில் எதை பின்பற்றினாலும் பூச்சிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்
வாய்விடங்கம் - 25 கி
புடைத்து தூசு நீக்கிக்கொள்ளவும். பிறகு குப்பை மேனி சாறு பிழிந்து அந்த வாய்விடங்கம் மூழ்கும் வரை ஊற்ற வேண்டும். நன்றாக ஊறவைத்து அந்த வாய்விடங்கம் ஓரிரு நாட்களில் அந்த குப்பை மேனி சாறை நன்றாக உரிந்து விடும். பிறகு நிழலில் நன்றாக காயவைத்து பொடி செய்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கு சிறிய தேக்கரண்டியில் கால்பாகம் எடுத்து தேன் கலந்து 3 வேளை கொடுக்கவும் 3 நாட்கள் போதும்.
அட நல்ல மருந்து தான் ஆனால் நாங்க நகரத்துல இருக்கோம் மாநகர்ல இருக்கோம் குப்பைமேனி சாறுக்கு எங்க போறது என்று நீங்கள் சொன்னால் மற்றொரு முறை பார்ப்போம்.
அதற்கும் வாய்விடங்கம் 25 கிராம். 15 எண்ணிக்கை மிளகு. இரண்டையும் நன்றாக அரைத்து பொடி செய்துக்கொள்ளவும். இதையும் சிறிய தேக்கரண்டியில் கால்பாகம் எடுத்து தேன் கலந்து 3 வேளைகளுக்கு 3 நாட்கள் கொடுக்கவும்.
குறிப்பு : மூன்றாம் நாள் மட்டும் வேப்பிலை கொழுந்தை சிறிது பறித்து ஒரு கல் உப்பு சேர்த்து அரைத்து மோரிலோ அல்லது தாய் பாலிலோ வெறும் வயிற்றில் கொடுக்கவும். இரண்டும் சேர்த்து சுண்டைக்காய் அளவு பாலில் கலக்கி கொடுத்தால் போதும். கிராமங்களில் குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன்பு இந்த முறையை இன்றும் பின்பற்றுகிறார்கள். அன்று இரவு 25 மில்லி விளகெண்ணையை கொடுத்து விடவேண்டும். கதை முடிந்தது. அடுத்த நாள் காலையில் பேதி ஆகும் பயப்படவேண்டாம். கொக்கி புழு அந்த புழு இந்த புழு எல்லாம் வெளியேறி விடும். இதை 6 மாதத்திற்கு ஒரு முறை கொடுக்கவும்.
என்னால் இதையும் செய்ய முடியாது என்றால் கொட்டை பாக்கு வாங்கி நன்றாக மையாக அரைத்து தேக்கரண்டியில் முக்கால் பாகம் பாலிலோ தண்ணீரில் கொடுக்க அன்றே வெளியேறும்.
நான் சொன்ன அளவு சுமார் 3 வயது முதல் 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு வயதுக்கு தகுந்தார் போல் மருந்துகளை சிறிது கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்.
தாத்தா பாட்டிகள் இதை சாதரணமாக செய்து விட்டு போவாங்க.

No comments:

Post a Comment