கம்பளி பூச்சியால் அவதியா ?
பொதுவா இங்க கம்பளி பூச்சிகள் உடலில் பட்டால் அதை அனுபவித்து பார்த்தவருக்கு தான் தெரியும். இந்த கம்பளி பூச்சிகள் முருங்க மரத்தின் கீழே வேர் பகுதியில் நிறைய இருக்கும். அதை ஒழிக்க அங்கே தீ வச்சி எதாச்சும் போட்டு கொளுத்தி விடுவார்கள். இது முரட்டு வைத்தியம்.
இதற்கு மாற்று முறைகளும் இருக்கு. ஒரு பிளாஸ்டிக் பையில் பெருங்கயத்தை கரைத்து வைத்துக் கொள்ளவும். அந்த பிளாஸ்டிக் பையை முருங்கை மரத்தின் வேர் பகுதியில் கட்டினால் போதும் நமக்கு தொல்லை இருக்காது.
மற்றொரு முறை
கட்டி பெருங்காயத்தை அப்படியே கரைத்து முருங்கை மரத்தின் வேர் பகுதியில் சுற்றி ஊற்றினால் போதும் கம்பளி பூச்சிகள் நமக்கு தொல்லை இல்லாமல் ஒழியும்.
மற்றொரு முறை
எதாச்சும் ஒரு சோப்பை தண்ணீரில் கரைக்க வேண்டும். அந்த கரைத்த தண்ணீரை மரத்தின் வேரில் சிறிது மற்றவற்றை வேருக்கு அருகில் ஊற்றி விட வேண்டும். இது கம்பளி பூச்சி குறைக்கும். அடுத்த முறை பாருங்க முழுவதும் ஓடி விடும்.
மற்றொரு முறை
வசம்பை வாங்க வேண்டியது. மாலையிலேயே ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊற வேண்டும். அடுத்த நாள் காலையில் எடுத்து நன்றாக அரைத்து முருங்கை மரத்தின் வேர் பகுதியில் ஊற்றினாலும் சரி அல்லது ஒரு சிறிய பள்ளம் எடுத்து ஊற்றிவிட வேண்டும். அடுத்த அரைமணி நேரத்தில் கம்பளி பூசிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும்.
சரி கம்பளி பூச்சியால் ஒவ்வாமை (அலர்ஜி) வந்தால் அந்த இடத்தில் முருங்க கீரை நன்றாக அரைத்து போட்டால் அரிப்பு குறைந்து சரி ஆகிவிடும்.
Saturday, 2 July 2016
கம்பளி பூச்சியால் அவதியா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment