வெடியுப்பாதி நெய்
வெடியுப்பு - 1 பலம்
கல்லுப்பு - 1 பலம்
வளையலுப்பு - 1 பலம்
இந்துப்பு - 1 பலம்
சவுட்டுப்பு - 1 பலம்
சுத்தி செய்த நேர்வாளம் - 1 பலம்
நாட்டு நவாச்சரம் - 1/2 பலம்
விளக்கெண்ணெய் - 1/4 படி
முற்றின தேங்காய் - 8
செய்முறை: உப்புகளை சுத்தி செய்துக் கொள்ளவேண்டும்.
தேங்காயில் இருந்து பால் பிழிந்து கொள்ள வேண்டும். மேற் சொன்ன உப்புகளை பொடித்துப் போட்டு அதில் விளக்கெண்ணையையும் ஊற்றி கடாயை அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்துக் கடுகு திரள் பதத்தில் நெய்யை வடித்து தனியே குப்பியில் வைத்துக் கொள்ளவேண்டும்.
அளவு : 4 முதல் 5 துளிகள்.
அனுபானம் : வெந்நீர், இளநீர், தேநீர், காப்பிபானம், காய்ச்சினபசும்பால், சுக்கு குடிநீர், சோம்புதீநீர், சக்கரை,வெல்லம் முதலியவற்றில் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள் : வெட்டை நோய், குன்ம நோய், வாயு நோய், செரியாமை நோய், சூலை நோய், கைகால் பிடிப்பு, சுரங்கள், சன்னிகள், கிருமி நோய், சோகை நோய் மற்றும் அனேக நோய்கள் தீரும்.
இந்த மருந்து அப்துல்லா சாயுபு அவர்களின் முறை.
முதல் நாள் இந்த மருந்தை நான் இஞ்சி துண்டை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் இந்தமருந்து துளிகளை விட்டு உடல் வன்மைக்கு தகுந்தார் போல் முதலில் 4 முதல் 15 துளிகள் வரை கொடுப்பேன்.
நன்றாக பேதி ஆகி குடல் சுத்தமாகும்.
தினமும் 3 முதல் 6 துளிகள் வரை சுமார் 10 முதல் 20 நாட்கள் வரை கொடுப்பேன். தினமும் நன்றாக வயிறு சுத்தமாகும் பேதி ஆகாது. மேற்கண்ட நோய்கள் தீரும். மருந்து செய்முறையில் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.
Saturday, 2 July 2016
வெடியுப்பாதி நெய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment