Thursday, 7 July 2016

பைரவர் பைரவ மூர்த்தி

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

       🙏� *பைரவர் பைரவ மூர்த்தி*🙏�

*தமிழ் எழுத்து முறைபைரவர்*
*எழுத்து முறைவையிரவன்,* *கஞ்சுகன்,*
*நிர்வாணி*
*வகைசிவனின் ஒரு மூர்த்தம்*

ஆயுதம்திரிசூலம்
துணைபைரவி

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.

இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார்.

பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது.

*பைரவரை , . . .*
*சொர்ணாகர்ஷண பைரவர்,*
*யோக பைரவர்,*
*ஆதி பைரவர்,*
*கால பைரவர்,*
*உக்ர பைரவர்,*
*என்றெல்லாம்*
*அழைக்கின்றார்கள்.*

கால பைரவர்,
சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்.

சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்.

ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும்,

சந்திரனைத் தலையில் வைத்தும்,
சூலாயுதம்,
பாசக் கயிறு,
அங்குசம் ,
ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.

கால பைரவர் சனியின் குருவாகவும்,
பன்னிரன்டு ராசிகள்,
எட்டு திசைகள்,
பஞ்ச பூதங்கள்,
நவகிரகங்களையும்,
காலத்தையும்
கட்டுப்படுத்துபவராகவும், கூறப்படுகிறார்.

*பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்*

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment