Thursday, 7 July 2016

எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன?*

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

*எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன?*

*ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்*

ரங்கநாதருக்கு தேங்காய்த்
துருவலும் ,
துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி,
வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

தினமும் இரவில்
அரவணை பிரசாதமும் உண்டு.

*திருவாரூர் தியாகராஜப்*
*பெருமானுக்கு*

நெய்யில்
பொறிக்கப்பட்ட
முறுக்கு தினசரி பிரசாதம்.

*திருக்கண்ணபுரம் சௌரிராஜப்*
*பெருமாளுக்கு*

தினமும் இரவில்
முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

*காஞ்சிபுரம் வரதராஜப்*
*பெருமாளுக்கு*

சுக்கு, மிளகு,
கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

*திருப்பதி வெங்கடாஜலபதிக்கு*

விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும், குலசேகரன் படியைத்
தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

*திருப்பெருந்துறை எனும்*
*ஆவுடையார் கோயிலில்*
*ஆத்மநாதருக்கு*

புழுங்கலரிசிச்சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.

*கேரள மாநிலம் கொட்டாரக்கராவில்*
*விநாயகப் பெருமானுக்கு*

சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர்.
உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

*ஸ்ரீமுஷ்ணம் பூவராக*
*மூர்த்திக்கு*

தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும்
மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படுகிறது.
இந்த பிரசாதம்
நோய்களை தீர்க்கும் மருந்தாகக்கருதப்படுகிறது.

*கேரளம், திருவிழா மகாதேவர்*
*ஆலயத்தில்*

மூலிகைகளைச்சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கிறது.

*நவகிரக, சுக்கிர தலமான*
*கஞ்சனூரில்*

அன்னாபிஷேகத்தின்
போது சுரைக்காய் பிரசாதம்
படைக்கப்படுகிறது.

*மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில்*

காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகின்றன

*கொல்லூர்*
*மூகாம்பிகைக்கு*

இரவு அர்த்தஜாம பூஜையின்போது சுக்கு,
மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்
மணமிக்க கஷாயம் பிரசாதமாகத்
தரப்படுகிறது.

*நெல்லையில் உள்ள*
*புட்டாத்தி அம்மன்* *ஆலயத்தில்*

அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத்தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

*கேரளம், குருவாயூரில்*
*குருவாயூரப்பனுக்கு*

சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

*திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு*

தினமும் அப்பம் நிவேதனம்
செய்யப்படுகிறது.

*கேரளம்,* *இரிஞ்சாலக்குடாவில் பரதன்*
*ஆலயத்தில்*

கத்தரிக்காயால்
தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப்பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில்
காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

*குற்றாலம் குற்றாலநாதருக்கும்*
*குழல்வாய்மொழி அம்மைக்கும்*

நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால்,
அவருக்கு தலைவலியும்
ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

""முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி
மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும்
தோசை,""
*மதுரை அழகர் கோயிலின்*
*பிரதான பிரசாதம்*

*திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில்*

தமிழ் மாதக்கடைசி வெள்ளியன்று
கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப்பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி,
காய்கறிகள் எல்லாம்
சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவதுதான்
கூட்டாஞ்சோறு.

*சிதம்பரம் நடராஜப்*
*பெருமானுக்கு*

கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும்
சிறப்பான நிவேதனங்கள்.

🙏ஹர ஹர மஹா தேவா 🙏

.   🙏திருச்சிற்றம்பலம்🙏

.     🙏ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment