Saturday, 2 July 2016

தூக்கம் வர சித்த மருந்து

தூக்கம் வர சித்த மருந்து
சடா மாஞ்சில் - 50 கிராம்
அமுக்கரா பொடி- 50 கிராம்
பனங் கற்கண்டு - 100 கிராம்
சடா மாஞ்சிலை தூசு நீக்கி பொடியாக்கி கொள்ள வேண்டும். அமுக்கராவை சுத்தி செய்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பனங் கற்கண்டைசேர்த்து அரைத்து புட்டியில் அடைக்கவும்.
அளவு - 5 கிராம்
அனுபானம் - பால்
வேளை - இரவு மட்டும்
குறிப்பு: நன்றாக தூக்கம் வரும். இது நோய்க்கான மருந்து. நோயின் மூலத்தை அறிந்து மருந்து கொடுப்பது சிறப்பு.

No comments:

Post a Comment