கால் மூட்டு வலிக்கு
கால் மூட்டு வலி மற்றும் அனைத்து இனைப்புகளிலும் ( மூட்டு) வலி என்றால் எல்லா இணைப்புகளில் உள்ள வழவழப்பான ஒருவிதமான திரவம் இருக்கும் அது குறைந்து போய் இருக்கும். இதற்கு ஆங்கிலத்தில் synovial fluid என்று பெயர். இது எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதை தடுக்கும். எலும்பு தேய்மானம் என்றால் இந்த synovial fluid குறைந்து உராய்வது தான். இது பெரும்பாலும் கால் மூட்டுகள் அதிகம் தெரியும். இந்த உடம்பையே தாங்குவதால் மூட்டில் வலி இருக்கும்.
அடிப்படையில் அனைத்து மூட்டுக்களிலும் வலி இருக்கும். இதற்கு வலி நிவாரணி(pain killer) அன்றைக்கு மட்டுமே பலன் தரும். திரவம் குறைந்தால் தினமும் வலி இருக்குமே? ஆங்கிலத்தில் எலும்பு தேய்மானம் என்று சொல்லி வலி நிவாரணி கொடுத்து விடுவார்கள் தினமும். அது பல பிரச்சனைகளை உண்டு பண்ணும். ஊக்கிகள் (Steroids) தினமும் பயன் படுத்த கூடாது. அது சிறுநீரக பாதிக்கு உண்டு பண்ணும்.
சரி இணைப்புகளில் உள்ள வழிகளுக்கு நிரந்தர தீர்வு வர மீண்டும் அதே திரவத்தை உடலில் சுரக்க வைக்க வேண்டும். சுண்ணாம்பு சத்து உடலில் சேர்த்து கொண்டால் வலி வராது. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போடுகிறவர்கள் பெரும்பாலும் இணைப்புகளில் வலியோடு என்னிடம் வருவது இல்லை.
வாரத்திற்கு இரண்டு முறை முருங்க கீரை ஒரு கைப்பிடி இனுக்குகள் (காம்புகள்) ஒன்றிரண்டாக தட்டி 400 மில்லி தண்ணி 200 மில்லியாக வத்த வைத்து அதை சூப்பாக அல்லது ரசம் எப்படியோ குடித்தால் போதும் மீண்டும் திரவம் சுரக்க ஆரம்பித்து விடும். இதற்கு அனேக சித்த மருந்து உள்ளது. பல விதமான சுண்ணம்புகளை பற்பமாக்கி கொடுப்பார்கள். அதாவது மேற்சொன்ன மருந்தை தான் கொடுக்க வேண்டியது இல்லை திரவம் சுரக்கும் எந்த மருந்தாகிலும் நல்லதே.
Saturday, 2 July 2016
கால் மூட்டு வலிக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment